பிபிலையில் திடீரென ஒரு வீட்டை சுற்றிவளைத்த அதிரடிப்படை! நிலத்தினுள் புர்க்காவுடன் வெடிபொருட்கள்!!
பிபிலைப் பகுதியில் நிலத்திற்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த புர்க்கா மற்றும் வெடிபொருட்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புத்தலைப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, பிபிலைப் பகுதியின் கொன்கல்லந்த என்ற இடத்தில் அமைந்துள்ள வீடொன்றை பொலிஸார் சுற்றி வளைத்துத் தேடுதல் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வீடு மற்றும் வீட்டுத் தோட்டம் என்பன தீவிர தேடுதலுக்குட்டது. இந்நிலையில், வீட்டுத்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த பொதி ஒன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். அந்தப் பொதியிலிருந்து 270 கிராம் எடையுடன் கூடிய சீ. 4 ரக வெடிபொருட்களும், முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா உடையொன்றும் மீட்கப்பட்டது.
இதையடுத்து குறித்த பொருட்களை பொலிஸார் கைப்பற்றியதோடு, வீட்டுரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை, பிபிலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக புத்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. வெதகெதர தெரிவித்தார்.
பிபிலையில் திடீரென ஒரு வீட்டை சுற்றிவளைத்த அதிரடிப்படை! நிலத்தினுள் புர்க்காவுடன் வெடிபொருட்கள்!!
Reviewed by Author
on
May 22, 2019
Rating:

No comments:
Post a Comment