அண்மைய செய்திகள்

recent
-

“தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாகிய நாங்கள் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம்.


“தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாகிய நாங்கள் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்களைக் கொலை செய்ய நாம் முயற்சித்திருக்கவில்லை” என முன்னாள் போராளி ஒருவர் இராணுவ கட்டளை தளபதிக்கு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகரை வதிவிடமாகக் கொண்ட  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று 512ஆவது படைத்தளத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் 512ஆவது பிரிகேட் தலைமையகத்தின் உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் முன்னாள் போராளிகள் சுமார் 50 பேரும் கலந்து கொண்டனர்.

இதன்போதே முன்னாள் போராளி ஒருவர் அவ்வாறு  தெரிவித்தார். அதனை தொடர்ந்து உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி நிலந்த, புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூக மயமாக்கப்பட்ட பின்னர் நான்  உங்களை அழைத்து சந்திக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் நாட்டின் இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந்திப்பதற்காக அழைத்துள்ளேன். குறிப்பாக நான் யாழ்ப்பாணத்திலுள்ள மும்மத பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினரை சந்தித்துள்ளேன். அதன் பின்னர் உங்களை அழைத்துள்ளேன்.

தற்போது நாட்டில் உள்ள நிலமை யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் இடம்பெறா வண்ணம் இருக்க வேண்டுமென்பதே எனது நோக்கம்.   எனவே யாழ்ப்பாணத்தின் அழகையும், யாழ்ப்பாண மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.
எனவே யாழ்ப்பாணத்திற்கு,  வெளி மாவட்டத்திலிருந்து வருவோர் தொடர்பில் அவதானமாக இருப்போமாக இருந்தால், கொழும்பில் நடந்த தாக்குதல் போல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாமல் தடுக்க முடியும்

எனவே வெளி மாட்டத்திலிருந்து வருவோர் தொடர்பில் பொது மக்கள் எமக்கு தகவல் தருவதன் மூலம் அனைத்து குற்றச்செயல்களையும் இல்லாதொழிக்க முடியும்- எனத் தெரிவித்தார்.



“தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாகிய நாங்கள் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம். Reviewed by Author on May 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.