அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபையில் பிரஸ்தாபம்-கடற்கரையோரத்திலுள்ள காணிகளை பல கம்பனிகள் கொள்முதல் செய்து வேலி அமைப்பதால் மீனவர்களுக்கு அசௌரியங்கள்.

மன்னார் பிரதேச சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள கடற்கரை அண்டிய பகுதிகளில் பல நிறுவனங்கள் காணி கொள்முதல் செய்து அவற்றை சுற்றி அடைக்கப்படுவதால் கடற்கரைக்குச் செல்லும் மீனவர்கள் தொழிலுக்கு செல்லுவதில் பல சிரமங்களை எதிர்கொள்வதாக மன்னார் பிரதேச சபைக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

மன்னார் பிரதேச சபையின் 14 வது மாதாந்தக் கூட்டம் செவ்வாய் கிழமை
(14.05.2019) காலை இதன் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில்
நடைபெற்றது.

இக் கூட்டத்தின்போது சட்டவிரோமாக கட்டிடங்கள் அமைப்பது மற்றும் மக்களின் போக்குவரத்துக்கு இடையூராக மதில்கள் வேலிகள் இடுவது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது தலைமன்னார் பியர் பிரதேச சபை உறுப்பினர் என்.நயீம் கருத்து தெரிவிக்கையில் தலைமன்னார் பகுதியில் மற்றும் மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட கடற்கரையை அண்டிய பகுதிகளிலுள்ள காணிகளை பல கம்பனிகள் கொள்முதல் செய்து கட்டிடங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் இவ் காணிகளை கொள்முதல் செய்பவர்கள் நீண்ட தூரம் வேலிகள்
அமைப்பதனால் தங்கள் கிராம புறத்திலிருந்து மீன்பிடி தொழிக்காகச்
கடற்கரைக்குச் செல்பவர்கள் நீண்ட தூரம் கால்நடையாக பயணித்தே கடற்கரையை அடைய வேண்டி சூழ்நிலை உருவாகி வருகின்றது என அவர் தெரிவித்தார்.

அத்துடன் பல இடங்களில் பிரதேச சபையின் அனுமதியின்றி பலர் மதில்கள்,
கட்டிடங்கள் அமைக்கப்படுவதாகவும் இக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதற்கு இவ் சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஐhஹீர் கருத்து
தெரிவிக்கையில் சபையின் அனுமதியின்றி கட்டிடங்கள், வேலிகள், மதில்கள்
அமைப்பதால் சபைக்கு வரவேண்டிய வருமானம் வீழ்ச்சி காணுவது ஒருபுறமிருக்க சட்டவிரோதமாக மதில்கள், வேலிகள் அமைப்பதால் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் வீதிகள் அமைக்க முற்படும்போது நாம் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவோம்.

ஆகவே இவ்வாறான சட்டபூர்வமற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றதாக என்பதை அவரவர் பகுதியில் உள்ள இந்த 21 உறுப்பினர்களும் கண்காணித்து இவ் சபையினூடாக நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும் என தெரிவித்தார்.



மன்னார் பிரதேச சபையில் பிரஸ்தாபம்-கடற்கரையோரத்திலுள்ள காணிகளை பல கம்பனிகள் கொள்முதல் செய்து வேலி அமைப்பதால் மீனவர்களுக்கு அசௌரியங்கள். Reviewed by Author on May 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.