அண்மைய செய்திகள்

recent
-

200மில்லியன்கள் இந்துக்கள் இருந்தாலும் எங்களுக்கென்று ஒரு நாடு இல்லை! தி.சரவணபவன் -


ஆவணப்படுத்தல் இல்லாத காரணத்தினால் நாங்கள் அனைத்தையும் இழந்து வருகின்றோம் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று பழமை வாய்ந்த ஆலயங்களின் புகழ்பாடும் அருள் நிறை பதிகம், இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு எல்லை வீதி சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த இறுவெட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு எல்லை வீதியில் உள்ள மாநகரசபை மண்டபத்தில் சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்தின் கே.உதயகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர், முனைக்காடு ஸ்ரீநாகலிங்கேஸ்வரர் ஆலயம், மட்டக்களப்பு சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயம் ஆகியவை தொடர்பில் பாடப்பட்ட இறுவெட்டு இதன்போது அதிதிகளினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் கருத்து தெரிவிக்கையில்,
உலகத்தில் ஆதிமொழி தமிழ், ஆதிமதம் இந்து மதம். ஆனால் எங்களுக்குள் இருந்த போட்டிகள் காரணமாக வரலாறுகளை தொலைத்தும் 200மில்லியன்கள் இந்துக்கள் இருந்தாலும் எங்களுக்கென்று ஒரு நாடு இல்லாத நிலையிலேயே நாங்கள் இருக்கின்றோம்.

தற்போது விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்படும், கூறப்படும் விடயங்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எமது மெய்ஞானிகளால் கூறப்பட்ட விடயங்களாகும்.

பல விடயங்களை யூதர்களும், அமெரிக்கர்களும் எங்களிடம் இருந்து திருடிச்சென்று தற்போது தங்களது வெளியீடுகளாக வெளிக்கொணர்கின்றனர்.
எமது மதம்தான் உலகத்திற்கு கலை, கலாசாரம், பண்பாடு, அறிவியல், மெய்யியலை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. இன்றும் எமது பல அறிவியல்கள் விஞ்ஞானிகளுக்கு சவாலாகவுள்ளது. தஞ்சை பெரும்கோயில் உட்பட பல இடங்கள் அவ்வாறு உள்ளது.

இவையெல்லாம் இழந்து போனதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. முக்கியமாக நாங்கள் ஒன்றையும் ஆவணப்படுத்துவதில்லை. ஆவணப்படுத்துவதையும் வெளிப்படுத்துவதில்லை.
நாங்கள் அனைத்தையும் மூடி மூடிவைத்ததன் காரணமாக பல விடயங்களை நாங்கள் இழந்துவிட்டோம். இலங்கையினை எடுத்துக்கொண்டால் இங்கும் நாங்கள்தான் ஆதிக்குடிகள்.

இராவணன் பரம்பரை நாங்கள்தான். ஆனால் தற்போது அதனை வேறு ஒரு பரம்பரையும் தங்களது என சொந்தம் கொண்டாடும் நிலையேற்பட்டுள்ளது.

அகஸ்தியர் இங்கு தனது பல்கலைக்கழகத்தினை நடாத்தியிருக்கின்றார். இது ஏழாயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்திருக்கின்றது.

அதற்கு முன்பாகவே இங்கு தமிழர்கள் இருந்திருக்கின்றார்கள். ஆவணப்படுத்தல் இல்லாத காரணத்தினால் நாங்கள் அனைத்தையும் இழந்து வருகின்றோம்.
மட்டக்களப்பு மான்மியம் என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. அதில் மட்டக்களப்பு மக்கள் அண்மையில் குடியேறிய மக்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அக்காலத்தில் இருந்த அறிஞர்கள், புத்திஜீவிகள் அன்று அதனை தடுக்கவில்லை.

அதன் காரணமாக இன்று இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள 2030ஆம் ஆண்டினை நோக்கிய அபிவிருத்தி இலக்கு என்னும் நூலில் அந்த வசனம் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.

எமது சரித்திர விடயங்களில், எமது பாரம்பரியங்களை பேணிப்பாதுகாக்கின்ற விடயங்களில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த நாட்டினை மதவெறியர்களின் தளமாக மாற்றும் கையிலான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

மதம் எங்களை வழிநடத்துகின்ற ஒரு சக்தியாகும். நாங்கள் மதவெறியர்களாக மாறக்கூடாது. மதமாற்ற விடயங்கள் பல வழிகளில் நடைபெறுகின்றது.
அதற்கு காரணம் எமது இந்து மத சமூகமும் தமது மக்களை சரியாக வழிநடாத்தாமையும் ஒரு காரணமாக அமைகின்றது.
அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இந்துக்களாக இருந்தவர்களாக இருக்கின்றனர். எதிர்காலத்தில் நாங்கள் மதமாற்றங்களை தடுக்கவேண்டும்.


எந்தமதமும் மக்களை அதிகமாக கூட்டுங்கள் என்று சொல்லவில்லை. தங்களது வருமானத்தினை அதிகரிப்பதற்காக இந்த மதமாற்றங்களை சிலர் செய்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் சிவஸ்ரீ வ.கு.யோகராஜா குருக்கள், சிவஸ்ரீ வ.கு.சிவானந்த குருக்கள் ஆகியோர் ஆன்மீக அதிதியாகவும், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கலந்துகொண்டார்.


200மில்லியன்கள் இந்துக்கள் இருந்தாலும் எங்களுக்கென்று ஒரு நாடு இல்லை! தி.சரவணபவன் - Reviewed by Author on July 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.