அண்மைய செய்திகள்

recent
-

நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி -


நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கிண்ணம் போட்டியில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி இங்கிலாந்து அணியின் சார்பில் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டியதால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ராய் 55 பந்தில் அரைசதமும், பேர்ஸ்டோவ் 46 பந்தில் அரைசதமும் அடித்தனர். அந்த ஜோடியில், ஜேசன் ராய் 60(61) ரன்களில் ஆட்டமிழது வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 24(25) ரன்களும், சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோவ் 106(99) ரன்களும் எடுத்து வெளியேறினர்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 11(12) ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 11(27) ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 4(11) ரன்னிலும், ஒரளவு ரன் சேர்த்த கேப்டன் மோர்கன் 42(40) ரன்களும், அடில் ரஷித் 16(12) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பிளங்கெட் 15(12) ரன்களும், ஆர்ச்சர் 1(1) ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை குவிந்திருந்தது.

நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக நீஷம், ஹென்றி மற்றும் டிரண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சாண்ட்னர் மற்றும் சவுத்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
306 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் துவக்க ஆட்டக்கார்கள் மார்டின் குப்தில் 8(16) மற்றும் நிகோல்ஸ்(0) ஆகியோர் அதிர்ச்சி கொடுத்து வந்த வேகத்திற்கு பெவிலியன் திரும்பினர்.

அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 27(40) ரன்களும், ராஸ் டெய்லர் 28(42) ரன்களும், ஜேம்ஸ் நீஷம் 19(27) ரன்களும், கிராண்ட் ஹோம் 3(13) ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டாம் லாதம், தனது அரை சதத்தை பதிவு செய்திருந்த நிலையில் 57(65) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய சாண்ட்னர் 12(30) ரன்களும், ஹென்றி 7(13) ரன்களும், டிரண்ட் போல்ட் 4(7) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் சவுத்தி 7(16) ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணி 45 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், ரஷித், வோக்ஸ், ஆர்ச்சர், பிளங்கெட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி - Reviewed by Author on July 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.