அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுத்தேவாலயத்தை நோக்கி படையெடுத்துள்ள பக்தர்கள் -


யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டிலிருந்து 150ற்கும் மேற்பட்ட யாத்திரியர்கள் மடுத்தேவாலயத்திற்கு சென்றுள்ளனர்.
குறித்த யாத்திரியர்கள் நட்டாங்கண்டலிருந்து பாலம்பிட்டி ஊடாக மடுநோக்கி சென்றுள்ளனர். மன்னார் மடுத்தேவாலயத்தின் ஆடிமாத்திருவிழா எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா பகுதியில் உள்ள சுமார் 150 இற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஆனையிறவு ஏ-9 பாதையூடாககொக்காவில் சந்தையை சென்றடைந்துள்ளனர்.
அங்கிருந்து ஐயன்கன்குளம் தேறாங்கண்டல் மல்லாவி ஊடாக நட்டாங்கண்டலை சென்றடைந்து, நட்டாங்கண்டலிருந்து பாலம்பிட்டி ஊடாக மடுவிற்கு யாத்திரியர்கள் சென்றுள்ளனர்.

இன்று நட்டாங்கண்டலிருந்து பாலம்பிட்டி வரை செல்லும் யாத்திரியர்கள் குறித்த பாதையானது சுமார் 19 கிலோமீற்றர் நீளமான தூரம் காட்டுப்பாதையாகவும் மக்கள் பயணிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் யாத்திகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த பயங்கரவாத தாக்குதல்களினால் கடந்த காலங்களில் அச்சநிலை காணப்பட்டாலும் அன்னையின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையின் காரணமாகதாங்கள் இந்த வருடம் தோறும் மேற்கொள்கின்ற இந்த யாத்திரையில் இம்முறையும் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மடுத்தேவாலயத்தை நோக்கி படையெடுத்துள்ள பக்தர்கள் - Reviewed by Author on July 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.