அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் விழிர்ப்புணர்வு சுவரொட்டிகள்---படம்

நாடு பூராகவும் மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் , கடல் வளங்கள் சுரண்டப்படுவது தொடர்பாகவும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் துண்டு பிரசுர விநியோகம் மற்றும் சுவரொட்டிகள் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சாந்திபுரம் , ஜீவநகர், ஜிம்ரோன் நகர் , உள்ளிட்ட கிராமங்களில் இன்று வெள்ளிக்கிழமை19-07-2019 காலை குறித்த துண்டுப் பிரசுரங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளில் சிறு மீனவர்களை பாதுகாக்கின்ற நிலையான மீன்பிடி கொள்கை ஒன்றை உருவாக்கு , ஐ.எல்.ஓ. வின் மீன் பிடி சமவாயத்தை அடிப்படையாக கொண்டு மீனவனை பாதுகாக்கின்ற பலமான செயல் முறை ஒன்றை துரிதமாக அமுல்படுத்து, அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் சேர்ந்து நடாத்தும் காணி மோசடிகள் மற்றும் அபிவிருத்தி என்ற பெயரில் மறைந்து அரசு நடத்தும் காணி கொள்ளையை உடனே நிறுத்து, என இரு மொழிகளில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பொது மக்களின் விழிர்ப்புணர்வுக்காக காட்சிப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.










மன்னாரில் விழிர்ப்புணர்வு சுவரொட்டிகள்---படம் Reviewed by Author on July 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.