அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயில் முளைவிடும் புதிய சிங்களக் குடியேற்றங்கள் -


முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவுக்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக குளமான, சின்னக்குளத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் ஆக்கிரமித்திருந்தனர்.
சின்னக்குளத்திற்குள் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள மக்கள் சிலர் அத்துமீறி மகாவலி அபிவிருத்தி அதிகாரசயைின் அனுமதியுடன் தோட்டப் பயிற்செய்கைகள் செய்து வருகின்றனர். தோட்டச் செய்கைக்கென குளத்தினுள் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது அக்குளத்தினை ஊடறுத்து மின்சார வேலி, மின் கம்பங்கள், புதிய வீதிகள் என்பன அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையானது குளத்தினுள் மேலும் புதிய சிங்களக் குடியேற்றங்களை அமைத்து விஸ்தரிக்க எடுக்கப்படும் நடவடிக்கையாக இருக்கலாமென அப்பகுதி தமிழ் மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.

அதேவேளை குறித்த சின்னக்குளத்தின் நீர்ப்பாசனத்தினைப் பயன்படுத்த கடந்த 1984ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்கு முன்னர் தாம் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அப்பகுதி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் சின்னக்குளத்தின் கீழ் சுமாராக 300ஏக்கருக்கும் மேலான வயல் நிலங்கள் காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலான இடப்பெயர்வு காரணமாக, குறித்த சின்னக்குளமானது சிதைவடைந்து காணப்படுகின்றது.
எனவே தற்போது இந்தக் குளத்தின் கீழ் உள்ள விவசாய நிலங்களில் பெரும்போக மானாவாரிச் செய்கை மாத்திரமே செய்கை பண்ணப்படுகின்றது. இக்குளத்தினைச் சீரமைத்து தரும்படி கமநல சேவை நிலையத்திடம் முறையிட்டிருந்த நிலையில், அவர்களால் இக்குளத்தின் சீரமைப்பிற்கென நிதி ஒதுக்கப்பட்டிருந்தபோதும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை இடையூறு விளைவிப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இக் குளத்தின் சீரமைப்புத் தொடர்பில், கடந்தமாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற கரைதுறைப்பற்றுப் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,
இக்குளத்தின் சீரமைப்புக்க 13.2மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டபோதும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமக்குரிய இடத்திற்குள் குளம் இருப்பதாக தெரிவித்து சீரமைப்பிற்கு தடை விதித்ததால், குறித்த குளத்தின் சீரமைப்பிற்கு வந்த நிதியை வேறு குளத்தின் சீரமைப்பிற்கு மாற்றியதாக கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்திருத்தமையும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயில் முளைவிடும் புதிய சிங்களக் குடியேற்றங்கள் - Reviewed by Author on August 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.