அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைசாட்சிகள் சமூகநல அமைப்புசிறப்பாக மன்னார் மறைசாட்சிகளின் 475ம் ஆண்டு யூபிலிவிழா.(1544/2019)





 மன்னார் மறைசாட்சிகள் சமூகநலஅமைப்புசிறப்பாககொண்டாடியமன்னார் மறைசாட்சிகளின் 475ம் ஆண்டு யூபிலிவிழா.(1544/2019)

மன்னார் மறைசாட்சிகள் சமூகநலஅமைப்பு வழமைபோல் மன்னார் மறைசாட்சிகள் நினைவு விழாவை கொண்டாடியது.600க்கு மேற்பட்டமன்னார் மறைசாட்சிகள் யாழ்ப்பாண-சங்கிலிஅரசனின் படையால் 1544ல் மன்னார் தோட்டவெளி பிரதேசத்தில் கிறிஸ்தவமதமாற்றத்தின் காரணமாககொல்லப்பட்டார்கள். இந்தஆண்டு 2019ல், 475ம் ஆண்டுநிறைவுஎன்பதினால் யூபிலிஆண்டாக இவ்விழாவை 20/07/2019 சனிக்கிழமைமேதகுமன்னார் ஆயர் கலாநிதிஇம்மானுவேல் பெனாண்டோஅவர்கள் தலைமையில் சிறப்பாககொண்டாடப்பட்டது.
ஆயத்தநாளாக20/07/2019 வெள்ளிக்கிழமைதோட்டவெளி பங்குத்தந்தையும் தோட்டவெளிவேதசாட்சிகள் திருத்தலத்தின் இயக்குனருமானஅருட்பணிடே.அலெக்சாண்டர் சில்வா (பெனோ) அடிகளாரால் இச்சமூககொடியாகியபரிசுத்தஆவிகொடி மாலை 4.45க்கு ஏற்றப்பட்டு செபமாலையுடன் விழாஆரம்பமானது. இதனைத் தொடர்ந்துஅருட்பணி.                          OMIஅவர்களால் ஆயத்தநாள் திருப்பலியும்,நற்கருணைஆராதனைமற்றும் இறைவார்த்தைபகிர்வும் வழங்கப்பட்டது.

அடுத்தநாள்  20/07/2019 சனிக்கிழமைகாலை 7.30  மணிக்குபிரதமவிருந்தினரான ஆயர் தந்தைஅவர்களும் மற்றும் குருக்களும்,அருட்சகோதரர்களும்,அருட்சகோதரிகளும்,பிரமுகர்களும் மாலைஅணிவித்துபான்ட் வாத்தியம் இசைக்கப்பட்டுபவனியாக ஆலயத்திற்குதிரும்பும் வீதியிலிருந்துஅழைத்துவரப்பட்டனர்.மறைசாட்சிகள் கல்லறைக்குமெழுகுதிரிஏந்திமக்கள் சென்றனர். ஆயர் தந்தைஅவர்களால் கல்லறைஆசீர்வதிக்கப்பட்டது. மேலும் அங்கு இறைமக்களால் மறைசாட்சிகளைபுனிதர் நிலைக்குஉயர்த்துவதற்கானசெபம் சொல்லப்பட்டது.தொடர்ந்துதிருப்பலியின் ஆரம்ப நிகழ்வாக மங்களவிளக்கேற்றப்பட்டது.
அதன் பிறகு பேரருட் கலாநிதிமேதகு ஆயர் இம்மானுவேல் பெனாண்டோஅவர்கள் தலைமையில் திருவிழாதிருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத்திருப்பலியில் ஆயருடன் சேர்ந்துஅருட்பணி.ஜெகானந்தம் (கீளியன் குடியிருப்புபங்குத்தந்தை) அருட்பணி.இ.செபமாலை (செட்டிக்குளம் பங்குத்தந்தை) அருட்பணி.N.L.அலெக்சாண்டர்.சில்வா (பெனோ) (தோட்டவெளிபங்குத்தந்தை) ஆகியோரும் திருப்பலி  ஒப்புக்கொடுத்தனர்.                                                                                     
ஆயருடைய மறையுரையில் “மன்னார் தோட்டவெளியில் மறைசாட்சிகளாக இரத்தம் சிந்தியவர்களை புனிதர்களாக்குவதற்கு சான்றாகதோட்டவெளியில் அவர்களின் கல்லறையில் இருக்கும் ஓரிரு எலும்புக்கூடுகளை அமெரிக்காவிற்கு அனுப்பிபரிசோதனை மேற்கொள்ள எண்ணுவதாகதெரிவித்தார்”. திருப்பலிமுடிந்ததும் “புனிதராம் சேவியரின்  தொண்டு” என்றபாடல் பாடப்பட்டது.

அதைத்தொடர்ந்துதிருவிழாவிற்குபின்னரானநிகழ்வுகள் நடைபெற்றது.பங்குத்தந்தையும் - வேதசாட்சிகள் திருத்தலம். தோட்டவெளியின் இயக்குனருமான அருட்தந்தை டே. அலெக்ஸ்சாண்டர் (பெனோ) தலைமைதாங்கநிகழ்வுகள் ஆரம்பமானது.
    இதைத்தொடர்ந்துவரவேற்புநடனம் சிறுமிகளால் வழங்கப்பட்டது. அடுத்தநிகழ்வாகதலைவர் திருசந்தியோகு (அமிர்தம்) அவர்கள் வரவேற்புரைநடத்தினார்.அதன் பின் அமைப்பின் ஆய்வாளர் திரு ச. அந்தோனிப்பிச்சை அவர்களால் மேதகு ஆயர் அவர்கள் மறையுரையில் கூறியவற்றிற்கு சான்றாகமன்னாரில் மறைசாட்சிகளின் தொன்மைவாய்ந்த பதிவுகள் பற்றி உரையாற்றுகையில்  “தோட்ட வெளிபங்கின் புனிதரும் மன்னார் மறைசாட்சிகளின் புனிதருமான புனித அந்திரேய அப்போஸ்தலருடைய திருச்சுருபத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  ஏனென்றால் 1544ம் ஆண்டுகார்த்திகை (நவம்பர்) 30ந் திகதி புனித அந்திரேயருக்கு மன்னாரின் முதல் கிறிஸ்தவர்களான கமண்டலர் என்ற கடயர் பட்டங்கட்டி மக்கள் திருவிழா கொண்டாடியபோது அன்று இப்பகுதியை ஆண்டு வந்த யாழ் சங்கிலிய மன்னனால் 600 க்குமேற்பட்டோர் கொல்லப்பட்டு மறைசாட்சிகள்ஆனார்கள்.

(fhz;: The Letters and Instructions of Francis Xavier. by Fr. M. Joseph Costelloe SJ   (By The Institute of Jesuit sources.)gf;fk;: 85>96>105>106>118)

இதைஉறுதிப்படுத்த கி.பி 1560 ல் மன்னாருக்குவந்தபோர்த்துக்கேயர் இங்கு கோட்டையை அமைத்து  ஆட்சிசெய்துபலசான்றுகளைவிட்டுச்சென்றுள்ளனர். கோட்டையிலிருந்துசெயல்ப்பட்டபோர்த்துக்கேய இராணுவத்தலைவனால் மறைசாட்சியவிடயங்களுக்குபலகாரியங்கள் செய்யப்பட்டுள்ளன.
1.கி.பி 1573ல் பழையஆலயம் புனரமைக்கப்பட்டு புதிய ஆலயம் புனிதஅந்திரேய அப்போஸ்தலருக்குஅபிஷேகம் செய்யப்பட்டுகோட்டையிலுள்ளபடைகளும் கலந்துகொண்டுவிழாகொண்டாடப்பட்டது.

2.அந்திரேயஅப்போஸ்தலர் ஆலயத்திற்குஎதிரேääமன்னார் கோட்டைதளபதியின் கட்டளைப்படிஒருசிலுவைசெய்துபான்ட் வாத்தியங்களுடனும் இராணுவமரியாதையுடனும் கொண்டுவரப்பட்டு ஊண்டப்பட்டது (அந்தசிலுவைதோட்டவெளிவேதசாட்சிகளின் கோவில் அருகில் இருக்கும் சிலுவையாக இருக்கலாம் எனநம்பப்படுகின்றது).


V.Perniola S.J -The Catholic Church in Srilanka -The Portuguese Period Volume 2.gf;fk;: 52-55)







3.இதைத்தொடர்ந்து கி.பி 1685ல் மன்னார் தீவுபோர்த்துக்கேய கேப்டனால் கையால் வரையப்பட்டது. அதில் மறைசாட்சிகள் மரித்த இடம் எது என்றுகாட்டஎருக்கலம்பிட்டிக்கு அருகிலுள்ள 5ம்கட்டை கடற்கரை ஓரத்தில் ஒருபெரியசிலுவை ஊன்றப்பட்டிருந்ததாககாட்டப்பட்டுள்ளது. இது தோட்டவெளியை குறிப்பிடுவதாக இருக்கின்றது.இதுவே மன்னார் தீவின் முதல் வரைபடமாகும். (இப்படம் இக்கட்டுரையின் முடிவிலுள்ளது.)                     (காண்: Fr. Gnanapragasiyar OMI. History of the Catholic Church in Ceylon  Volume 1பக்கம்: 44)


         1. 

அதேபோல் கன்னியாகுமரிமுதல் மன்னார் தீவுவரையிலானபகுதி இயேசுசபையின் பணித்தளமாகும். மன்னார் தீவுக்குவெளியேஎந்தநிகழ்வும் நடக்கவில்லை. ஆகவே தூத்துக்குடிபிரதானபணித்தளமாக இருந்ததால் மறைசாட்சியவரலாற்றுஆய்விற்குஅங்கிருந்துசெய்திகளைதிரட்டுவதுமிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனஉரையாற்றிமுடித்தார்.அடுத்தநிகழ்வாக இந்நிகழ்வின் பிரதமவிருந்தினரானமேதகு ஆயர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. மேலும் வாழ்த்துப்பாஅமைப்பின் பொருளாளர் திரு.யேசுதாசன் ஜோன்நிகால் (பருத்திப்பண்ணை) அவர்களால் வாசிக்கப்பட்டுஅமைப்பின் நிர்வாகிகள் மூலம் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்துகல்விக்கானபரிசுமாணவர்களுக்குவழங்கப்பட்டது. மேலும் மேதகு ஆயர் அவர்கள் தனதுசிறப்புரையைநடத்தினார். அதில் “மறைசாட்சிகள் புனித நிலையடைய மறைமாவட்டரீதியில் எல்லாபங்குகளிலும் ஒரேநாளில் நினைவுத்திருப்பலிகொண்டாடமுயற்சிகள் செய்யப்பட்டுள்ளது.இதற்குமுன்னையஆயர்கள் அதிக பங்களிப்பு செய்துள்ளனர். திரு.அந்தோனிப்பிச்சைஅவர்கள் கூறுவதுபோல் தூத்துக்குடி மறைமாவட்டத்தை ஆய்விற்கு பயன்படுத்துவோம். புனிதசவேரியாருக்கு  இவ்வமைப்பு கெபிகட்டுவதை வரவேற்கின்றேன் எனக்கூறி உரையை நிறைவு செய்தார்.

அதன்பின் அமைப்பின் செயலர் திரு.செபமாலை ஜோய்ஜனஸ் (குணாளன்) காத்தான்குளம் - (வட்டக்கண்டல்)அவர்கள் நன்றியுரைவழங்கினார். தொடர்ந்துவிருந்தினர் உபசரணைநடந்தது. அதன்பிறகு கொடியிறக்கநிகழ்வு நடைபெற்றது.
அத்தோடுபுனிதவேதசாட்சிகள் இராக்கினிஆலயவளாகத்திற்குள் புனிதசவேரியாருக்கு இவ்வமைப்புசார்பாககெபிஒன்றுகட்டுவதற்குமேதகு ஆயர் அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.மேலும் 475ம் யூபிலிஆண்டு நினைவாக வேதசாட்சிகள் சமூகமக்கள் வாழும் கிராமங்களிலுள்ள 24 கோயில்களிலும் 475 மரக்கன்றுகள் நடுவதின் முன்னோடியாக மாமரக்கன்றுகள் தோட்டவெளி வேதசாட்சிகள் கோயில் வளாகத்தில் நடப்பட்டது. அதைதொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் நடந்து விழா இனிதே நிறைவுற்றது.

இவ்விழாவில் மன்னார் பிரதேசசபை உறுப்பினர்களான யுஸ்ரின் (மோகன்) தோட்டவெளி,யேசுதாசன் ஜோன் நிகால் (பருத்திப்பண்ணை),மன்னார் நகரசபை உறுப்பினர் T.சந்திரன் ஆகியோரும் மேலும்அதிகஇறைமக்களும்வருகைதந்துவிழாவைசிறப்பித்துமறைசாட்சிகள் புனிதர் நிலையடையசெபித்தார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்கானஅனைத்துவேலைகளையும் அமைப்பின் தலைவர் திரு. சந்தியோகு (அமிர்தம்)நெடுங்கண்டல்அவர்கள் தலைமையில் ஏற்படுத்தப்பட்டவிழாக்குழுசிறப்பாகசெய்துமுடித்தது.

முதலாவதுவரையப்பட்டமன்னார் தீவின் வரைபடம் (போர்த்துகேயர் காலம்)

LE GRAND’S Map of Mannarfp.gp 1685

(அருட்பணி நல்லூர் ஞானப்பிரகாசியார் எழுதிய இலங்கை கத்தோலிக்க திருச்சபை வரலாறு புத்தகம்  (1505-1602) கொழும்பு 1924.பக்கம் -44)


இந்தப்படத்தில் எருக்கலம்பிட்டி–ஐந்தாம்கட்டைகடற்கரைஅருகில் பெரியசிலுவைஊண்டப்பட்டுதோட்டவெளிமறைசாட்சிகள் பூமிஎன்றுகாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இயேசுசபையினர் தங்களதுபணிமனையைமன்னார் தீவிற்காகதோட்டவெளியில் அமைத்தார்கள்.

தகவல்:-S.அந்தோணிப்பிச்சை(M.A,M.phil)
மன்னார் மறைசாட்சிகள் சமூகநலஅமைப்பு
 (ஆய்வாளர், ஸ்தாபகர்,ஆலோசகர்,தொடர்பாளர்)                                   






மன்னார் மறைசாட்சிகள் சமூகநல அமைப்புசிறப்பாக மன்னார் மறைசாட்சிகளின் 475ம் ஆண்டு யூபிலிவிழா.(1544/2019) Reviewed by Author on September 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.