அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தமிழர்கள் செல்வந்தர்களாக வாழும் பிரமிக்க வைக்கும் தீவு!


உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இருக்க முடியாது. அதுவும் குறிப்பாக இலங்கை, இந்தியா, சிங்கப்புர், மலேசியா, சவுதிஅரேபியா, ஐரோப்பா ஏன் அமெரிக்காவில் கூட தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், தமிழர்கள் அதிக அளவில் வாழும் தனி தீவு ஒன்று உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?
சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வாழும் ரீயூனியன் என்ற தீவுதான் அது. ஆப்பிரிக்ககண்டத்திற்கு கிழக்கே இந்தியப்பெருங்கடலில் மடகாஷ்கருக்கு அருகிலுள்ள ஒரு மிகச்சிறிய தீவுதான் இந்த ரீயூனியன் தீவு.
சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 45கிலோமீட்டர் அகலமும் உள்ள இந்த தீவின் மொத்த பரப்பளவு 2500 சதுரகிலோமீட்டர்கள் மட்டுமே.
இந்ததீவின் மொத்த மக்கள்தொகை சுமார் எட்டரை லட்சம். அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் உள்ளனர்.

உலகில் தமிழர்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழும் இடங்களில் ஒன்றுதான் இந்த ரீயூனியன் தீவு தமிழகத்தில் இருந்து வெளியே சென்ற தமிழர்களில் மிகவும் மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றவர்களில் இவர்களே முதன்மையானவர்கள்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத்தொலைவில் இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதிதான்.
கடந்த 1827 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பிரெஞ்ச் பிரதேசமாக இருந்த போது சுமார் 25 வருடங்கள் தொடர்ச்சியாக பாண்டிச்சரி, காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், போன்றபகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் அப்போதைய நாட்களில் ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்த ரீ யூனியன் தீவில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச்செல்லப்பட்டார்கள். இரண்டுமே பிரெஞ்சுப் பிரதேசங்களாக இருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை. சிலர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் இருந்தும் குடியேறினார்கள்.
இப்போது உள்ளவர்களில் பலர் அவர்களின் சந்ததியினரே. ஆரம்பத்தில் ஒப்பந்தக்கூலியாக அழைத்துச் செல்லப்பட்டாலும், பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவர்கள் அத்தனை பேருக்கும் பிரெஞ்சு குடியுரிமை அளித்து கௌரவமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றுக்கொண்டது.

இவர்கள்அனைவரும் இன்று சமஉரிமை பெற்று மகிழ்ச்சியான பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கின்றனர். மேலும் தங்களை பிரெஞ்சுத் தமிழர்கள்என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள்.
ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரங்களுடன் ஒன்று கலந்து விட்டாலும், இன்னமும் இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில், தமிழ்ப்பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள்.
தைப்பூசம், பொங்கள் போன்ற அனைத்து தமிழர் பண்டிகைகளையும் இப்போதும் விடாமல் கொண்டாடுகிறார்கள். இதுவரை 100 முறைகளுக்கு மேல் நெருப்புக் குழம்பைக் கக்கியுள்ள இரண்டு எரிமைலைகள் இந்த தீவின் சிறப்பம்சம். இந்த எரிமலைகளின் சரிவுகளில் அடர்ந்த அழகான காடுகள் உள்ளன.
ரீ யூனியனின் தீவின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் அதன் மழை வளம். 1966 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிக்கு இடைப்பட்ட 24 மணி நேரங்களில், இங்கு 1,870 மில்லிமீட்டர் மழை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அளவு இதுவரை முறியடிக்கப்படாத ஒரு உலக ரெக்கார்ட் இப்படி அற்புதமான இயற்கை வளம் நிறைந்த இத்தீவில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு தங்களது தாய்த் தமிழகத்திடமிருந்து ஒரே ஒரு வேண்டுகோள்தான். அவர்களுக்கு தமிழும் இசையும் நடனமும் இலக்கியமும் கற்றுத்தர யாரும் கிடைக்க மாட்டார்களா என்பதுதான்.
இலங்கை தமிழர்கள் செல்வந்தர்களாக வாழும் பிரமிக்க வைக்கும் தீவு! Reviewed by Author on September 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.