அண்மைய செய்திகள்

recent
-

ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை பிள்ளைகளாக வளர்க்க வேண்டும். வன்னி எம்.பி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

நாம் எமது பிள்ளைக்கு எவ்வளவு சீதனம் சேர்த்து வைத்திருக்கின்றோம் நாம்
எவ்வளவு தூரம் பிள்ளைகளை படிப்பித்து வைத்திருக்கின்றோம் என்பது அல்ல. நாம் எமது பிள்ளைகளை எவ்வளவு தூரம் பிள்ளைகளை பிள்ளைகளாக வளர்த்து வைத்திருக்கின்றோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும் என வன்னி பாரளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா  இவ்வாறு தெரிவித்தார்.

கம்பெலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூன்று லட்சம் ரூபா செலவில்
மன்னார் நகரில் தலைமன்னார் மன்னார் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு
லிங்கேஸ்வர ஆலய அறநெறிப் பாடசாலை கட்டத்தை வன்னி பாரளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி  ஸ்ரீஸ்கந்தராஜா வெள்ளிக் கிழமை 27.09.2019 திறந்து
வைத்தார்.

இவ் நிகழ்வில் இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் வைத்திய கலாநிதி
மு.கதிர்காமநாதன், மன்னார் இந்து குருமார் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ மஹா
தர்மகுமாரக் குருக்கள், வைத்திய கலாநிதி மகேந்திரன் உட்பட செல்வம்
பிறதர்ஸ் உரிமையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு வன்னி பாரளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தினி ஸ்ரீஸ்கந்தராஐh
தொடர்ந்து உரையாற்றுகையில்

கம்பெரலிய நிதித் திட்டத்தின் கீழ் எனக்கு 300 மில்லியன் ரூபா
ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இவ் திட்டத்தில் இந்த அறநெறி பாடசாலை கட்டிடத்துக்கு நான் எவ்வளவு ஒதுக்கீடு செய்திருந்தேன் என்பது எனக்கு ஞாபகம் இல்லததிருந்தபொழுதும் இன்று இவ் விழாவுக்கு வந்திருந்தபொழுதுதான் இதற்கு மூன்று மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிந்து கொண்டேன். எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 348 க்கு மேலான அபிவிருத்தி வேலைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நான் இந்த அறநெறி பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி அத்திவாரம் இடுவதற்கே போதாமையாக இரு;தபோதும் நீங்கள் இவ் கட்டிடத்தை ஏதோ ஒரு வழியில் முழுமையாக்கி உள்ளீர்கள். இதற்காக நான் உங்களை பாராட்டுகின்றேன்.

யுத்தத்துக்குப் பின் எமது கலை கலாச்சாரம் பண்பாடுகள் ஆகியவற்றை எமது
எதிர்கால சந்ததினருக்கு கொண்டு செல்வது இவ்வாறான அறநெறி பாடலைகள் இன்றியமையாதவை. நான் யுத்த பூமியிலே பிறந்தவள், வாழ்ந்தவள், வளர்ந்தவள், இறுதி யுத்தித்தில் அகப்பட்டவள் யுத்தத்தின் வலியை சுமந்து கொண்டிருப்பவள்.

எனக்கு ஒரு அச்சம் இருந்தது. பஞ்ச புராணம் ஓதுவதற்கு எதிர்காலத்தில்
யாரும் இல்லாமல் ஆகிவிடுவார்களோ என்று. ஆனால் இங்கு சிறுவர்கள் வந்து பாடியபோது எனக்கு மன நிறைவைக் கொண்டு வருகின்றது.

எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நான் பெண்கள் தலைமைத்துவம் கொண்டவர்களுக்கான உதவிகள், அறநெறி பாடசாலைகளை உருவாக்குதல் ஆகியவற்றை குறிப்பிடடிருந்தேன்.

நாம் மன்னார் மாவட்டத்தில் சைவத்தை வளர்த்து எடுப்பதற்கு அதை நிலை
நாட்டுவதற்கு பல போராட்டங்களை பல சவால்களை எதிர் கொள்ளுகின்றோம் என்பது எனக்குத் தெரியும்.

நாங்கள் அக்கினி குஞ்சுகள் நாங்கள் சோர்ந்து போவதில்லை. நான் உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன் உங்களுக்கு கை கொடுப்பேன்.

இங்கு சொற்ப தாய்மார்தான் வந்திருக்கின்றபோதும் நானும் இரண்டு
பிள்ளைகளுக்கு தாயானவர் என்பதால் நான் உங்களோடு இதை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அதாவது நாம் எமது பிள்ளைக்கு எவ்வளவு சீதனம் சேர்த்து வைத்திருக்கின்றோம் நாம் எவ்வளவு தூரம் பிள்ளைகளை படிப்பித்து வைத்திருக்கின்றோம் என்பது அல்ல.

 நான் எமது பிள்ளைகளை எவ்வளவு தூரம் பிள்ளைகளை பிள்ளைகளாக வளர்த்து வைத்திருக்கின்றோம் என்பதை பார்க்க வேண்டும்.

இந்த சவாலை எதிர்கொள்வதற்கு இன்று எத்தனை குடும்பங்கள் நல்ல சூழலில் இருக்கின்றது என்பது எனக்கு சந்தேகமாக இருக்கின்றது.

நான் சிறு பராயமாக இருக்கும்போது நித்திரைக்குச் செல்லும்போது எனது ஆச்சி எனக்கு சிறு சிறு கதைகள் சொல்லுவா. 'அறம் வெல்லும்,' 'நியாயம் வெல்லும்.' 'நீதி வெல்லும்,' 'பாவம் தோக்கும்' என்பாள்.

வீட்டிலே பொழுது அடையும் நேரத்தில் சுவாமி அறையில் படத்துக்கு விளக்கு
ஏற்றி றெ;றியில் திருநூறு பூசுவோம். இப்பொழுது எத்தனை வீடுகளில் இந்த
நிலை தொடர்கிறது. இது கேள்விக் குறியே.

இப்பொழுது ஆறு மணியாகியதும் வீடுகளில் தொடர் நாடகங்கள். எனது நண்பி
ஆசிரியர் சொன்னக் கதை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டுப்பாடம்
செய்து வராதாம். படிப்பிக்கும் நேரங்களில் தூங்கிக் கொண்டே இருக்குமாம். ஆனால் பிள்ளைகளோடு விளையாடும்போது தொடர் நாடகங்களைப் பற்றி ஏனைய பிள்ளைகளோடு பகிர்ந்து கொண்டு இருப்பாவாம்.

இந்த பிள்ளை பிற்பகல் ஆறு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணி வரை ரிவி க்கு முன்பாகவே இருப்பாவாம். நாம் ஆயிரம் கட்டிடங்களை கட்டலாம், பெருந் தொகை நிதியை கொண்டு வரலாம். ஆனால் குடும்ப சூழலை சரியாக அமைக்காவிடில் நாம் அடுத்த அடியை தூக்கி வைக்க முடியாது.

எந்த பிள்ளையும் நல்லப் பிளை;ளை மண்ணில் பிறக்கையில் அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பிலே. இதைத்தான் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு பெற்றோரும் இப்பொழுது எதை கையாளுகின்றார்கள் என்றால் அறநெறி பாடசாலைக்கு செல்லும் நேரத்தில் அங்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பாது வேறு பாடங்களுக்கு அனுப்பி வைக்கும் நிலையையே நாம் காணுகின்றோம்.

இந் நிலை மாற்றம் அடைய வேண்டும். ஆன்மீகம் மற்றும் ஒழுக்கத்தில்
பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர் உட்பட ஒவ்வொருவரும் அக்கரை கொள்ள வேண்டும் மேலும் அவர் தெரிவிக்கையில் மன்னார் பெரியகமத்தில் இருக்கும் கலாச்சார மண்டபத்தை புனரமைக்க என்னிடம் நிதி கோரப்பட்டிருந்தது.

கூட்டமைப்பினருக்கு கம்பெரலித் திட்டத்தின் கீழ் நிதி
ஒதுக்கப்பட்டிருந்தபொழுது எங்கள் கூட்டமைப்பிலிருந்து இருவர் விலகிச்
சென்றமையால் இவர்களின் நிதியை எங்களுக்கு தற்பொழுது
பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இவ் நிதியில் இருபது இலட்சம் ரூபாவை இதற்கு ஓதுக்கீட செய்துள்ளேன் என்பதையும் உங்களுக்கு மகிழ்வுடன் அறியத் துரகின்றேன் என்றார்.






ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை பிள்ளைகளாக வளர்க்க வேண்டும். வன்னி எம்.பி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா Reviewed by Author on September 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.