அண்மைய செய்திகள்

recent
-

17 லட்சம் ரூபா பெறுமதியான நிவாரணபொருட்கள் கையளிப்பு-படங்கள்

வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வறுமானம் குறைந்த வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் வறட்சி மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்(MSEDO) ஏற்பாட்டில் அதன் குழுத்தலைவர் ஜாட்சன் தலைமையில் நேற்று காலை 10 மணி தொடக்கம் மலை 8 மணிவரை குறித்த நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வவுனியா பிரதான வீதியின் எல்லை கிராமங்களான கண்ணாட்டி,பெரியகட்டு,பிரமணாலங்குளம்,

நீழியாமோட்டை,கூழங்குளம்,வடகாடு,தம்பனைவீதி,கல்லுமலை ஆகிய கிராமங்களில் தொடர்சியாக வறட்சி மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட மக்களுக்கு கிராம சேவகர்களின் தெரிவின் அடிப்படையில் 17 லட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களான மா,அரிசி,சீனி,தேயிலை அடங்கிய நிவாரண பொதிகளே தெரிவு செய்யப்பட்ட 500 மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிவாரண பொருட்கள் கண்ணாட்டி பங்குத்தந்தை கிராமசேவகர்கள் மெசிடோ நிறுவன ஊழியர்களால் பொது மக்களிக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

17 லட்சம் ரூபா பெறுமதியான நிவாரணபொருட்கள் கையளிப்பு-படங்கள் Reviewed by Author on October 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.