அண்மைய செய்திகள்

recent
-

ஆசிரியர் நெருப்பை போன்றவர்கள். மாணவர்களை உருவாக்கவும் அழிக்கவும் தன்மை கொண்டவர்கள். REV.அன்ரன் கொன்சலஸ் அடிகளார்

ஆசான்கள் நெருப்பைப் போன்றவர்கள். இந்த நெருப்புக்கு அழிக்கக்கூடிய சக்தி
உண்டு. அத்துடன் உருவாக்கக் கூடிய சக்தியும் இந்த நெருப்புக்கு உண்டு.
ஆகவே ஒரு மாணவனை பிரகாசிக்கச் செய்வதும் அந்த மாணவனை அழிவுப் பாதைக்குஇட்டுச் செல்வதும் இந்த ஆசிரியர்களைச் சாரும் என அருட்பணி அன்ரன்கொன்சலஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

பேசாலையில் பேசாலை  சமூகத்தினரால் ஆசிரியர் தினம் நேற்று ஞாயிற்றுக்
கிழமை (06.10.2019) கொண்டாடப்பட்டது. இவ் தினத்தை முன்னிட்டு பேசாலை
புனித வெற்றிநாயகி ஆலயத்தில் அருட்பணி அன்ரன் கொன்சலஸ் அடிகளாரின்தலைமையில் பங்கு பேசாலை தந்தையர்கள் திருச்சபையின் சட்டவல்லுனர் அருட்பணி தேவராஜ் கொடுதோர் அடிகளார் மற்றும் அருட்பணி றஞ்சன் சேவியர் அடிகளார் இணைந்து ஆசிரியர்களுக்கான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இவ் வேளையில் அருட்பணி அன்ரன் கொன்சலஸ் அடிகளார் தனது மறையுரையில்

நான் பேசாலையில் இந்த ஆலயத்தில் பீடப்பணியாளர்களை வழி நடத்தியவனாகவும் இங்குள்ள பாடசாலையான பாத்திமா கல்லூhயில் 10 ஆம் ஆண்டு தொடக்கம் 13 ஆம் ஆண்டு வரை கல்வி கற்றவனாக இருந்த வேளையில் எனக்கு கற்றுத் தந்த எனது ஆசிரியர்கள் முன்னிலையில் நான் இன்று ஆசிரியர் தின விழாவில் மறையுரை ஆற்றுவது எனக்கு ஒரு கடினமான விடயமாகும்.

இருந்தும் இந்நேரம் நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டிதான் ஆகவேண்டும். எங்களுடைய வாழ்விலே நாங்கள் மனிதர்களை பார்க்கின்றோம். இவர்கள் மாறக்
கூடியவர்கள். பொருட்களைப் பார்க்கின்றோம் அவைகள் மாறக்கூடியவைகள். ஆனால் கடவுள் மட்டும் மாறாதவர் என்பது நியதி.

நாம் சந்திக்கும் மனிதர்கள் மாறக்கூடியவர்கள் எனத் தெரிந்தும் அவர்களுடைய குண அதிசயங்கள் மாறும் எனத் தெரிந்தும் எங்களுக்குள் ஒரு நம்பிக்கை நாங்கள் ஒருநாள் அந்த மனிதர்களை நல்ல மனிதர்களாக மாற்றுவோம் என்று.

அது எதிர்நோக்குடன் கொண்ட நம்பிக்கை. சில சமயங்களில் நாம் பார்க்கின்றோம் பல மனிதர்கள் தாங்கள் எதை செய்கின்றோம் எதை செய்து கொண்டிருக்கின்றோம்
என்பதை மறந்தவர்களாக இருக்கும்பொழுதும் மனிதர்களாகிய நாம் அவர்களை நம்புகின்றோம் என்றால் என்றோ ஒருநாள் மாற்றத்தை கண்டு கொள்ளுவார்கள் என்று. இயேசுவிடம் சீடர்கள் கேட்கின்றார்கள் எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்படி. இன்று எமது சமூதாய வாழ்க்கையை சீர்தூக்கி பார்க்கின்றபொழுது எங்களுடைய பல பேர் அந்த சீடர்கள் கேட்டதைப் போன்று எம்மில் கேட்க தயாராக இருக்கின்றோமா?

இன்று நாம் கேட்பது எம்மிடம் இருக்கும் சொத்துக்களை மிகுதியாக்கும்
எங்களுக்கு தரப்பட்டுள்ள அந்தஸ்துக்களை மிகுதியாக்கும் போன்றவற்றையே நாம் இறைவனிடம் கேட்கின்றோம்.

இதைவிட மிக கொடூரமானது பணம் படைத்தவர்களை  வாழ்க்கையில் மிக
எளிமையானவர்களாக மாற வேண்டும் என ஆண்டவரிடம் கேட்பது உண்டு.

ஆனால் ஆண்டவர் இயேசுவுடன் மூன்று வருடங்கள் பகிரங்கப் பணியில் ஈடுபட்டு ஆண்டவர் என்ன செய்கின்றார் எதை செய்துக் கொண்டு இருக்கின்றார் என்பதை அறிந்த சீடர்கள் ஆண்டவர் இயேசுவுடம் பார்த்து கேட்கின்றார்கள் எங்களுடைய நம்பிக்கையை மிகுதியாக்கும் என்று.

ஆண்டவருடன் பயணித்து அவருடைய அருங்கொடைகளைக் கண்ட சீடர்கள் தங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் என்று கேட்டார்கள் என்றால் நாம் இறைவனிடம் எதை கேட்கின்றோம் எதை கேட்கப் போகுன்றோம்.

ஒரு ஊடகவியலாளர் புனித அன்னை திரேசாவைச் சந்தித்து கேட்டபோது அன்னையே நீங்கள் இந்த புனிதமான செயலைச் செய்வதற்கு உங்களுக்கு எங்கிருந்து இந்த சக்தி கிடைக்கப் பெறுகின்றது என கேட்டார்.

அதற்கு புனித அன்னை திரேசா திவ்விய நற்கருணைக்கு முன் அந்த ஊடகவியலாளரை அழைத்துச் சென்று இவர்தான் எனக்கு சக்தியும் வழிகாட்டலுமாக இருக்கின்றார். இவருடன் நான் ஒரு மணி நேரமாவது உரையாடுவேன். இதனால் நான் எவருக்கும் அஞ்சமாட்டேன் என்றும் எனக்கு நம்பிக்கையுண்டு இறைவன் என்னை பார்த்துக் கொள்ளுவார் என்று சொன்னார். இதனால்தான் நம்பிக்கையுடன் செயல்பட்டதால் அவர் இன்று புனிதராக உயர்த்தப்பட்டுள்ளார்.

புனித யோசேவ்வாஸும் இலங்கைக்கு வந்தபொழுது தனது பணி கடினமானது. தனக்கு மரணம் ஏற்படும் என அறிந்தும் இறை நோக்குடன் கொண்ட நம்பிக்கையுடன் செயல்பட்டார். இன்று புனிதராக உயர்த்தப்பட்டார்.

இவ்வாறு நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சவால்களை இறைநோக்குடன் கொண்ட நம்பிக்கையுடன் செய்படும்போது அவைகள் நமக்கு இறை ஆசீர்வாதமாக அமையும். இன்று (நேற்று) நாம் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். இந்த ஆசிரியர் தொழில் ஒரு புனிதமான தொழில். ஏனக்கு இன்னொரு பிறப்பு இருக்குமாகில் நான் விரும்புவது ஆசிரியர் தொழிலையே.

ஏனென்றால் மாதா, பிதா, குரு தெய்வம். பெற்றோருக்கு அடுத்தப்படியாக
போற்றப்படுபவர்கள் இந்த ஆசான்களே. ஆசான்கள் நெருப்பைப் போன்றவர்கள். இந்த நெருப்புக்கு அழிக்கக்கூடிய சக்தி உண்டு. அத்துடன் உருவாக்கக் கூடிய சக்தியும் இந்த நெருப்புக்கு உண்டு.

ஆகவே ஒரு மாணவனை பிரகாசிக்கச் செய்வதும் அந்த மாணவனை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதும் இந்த ஆசிரியர்களைச் சாரும்.

நெருப்புக்குள் தங்கத்தை இடும்பொழுது அது புடமிடப்படுகின்றது.
இவ்வாறுதான் ஆசிரியர்கள் மாணவர்களை புடமிடுகின்றபொழுது மாணவர்கள் ஒளிமயமான மாணவர்களாக மிளிர்வார்கள்.

ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பிலிருந்து நம்பிக்கை, இறை விசுவாசம், ஏற்றுக்கொள்ளுகின்ற தன்மை, மற்றவர்களுக்கு தட்டிக் கொடுக்கும் தன்மை ஆசிரியர்கள் வாழ்வில் மட்டுமல்ல எல்லோர் வாழ்விலும் அமையும்போது நாம் பயணற்ற பணியாளர்கள். நாங்கள் எங்கள் கடமைகளைத்தான் செய்தோம் என்று சொல்லத் தோன்றும்.

இது எமது வாழ்வில் அமைய வேண்டுமானால் எதிர்நோக்கு கொண்ட நம்பிக்கை இருக்க வேண்டும். புனிதமான தொழிலை பொறுப்பேற்றிருக்கும் ஆசானாகிய நீங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை மிளரச் செய்வது ஆசிரியர்கள் மறந்துவிடக் கூடாது.

பிறர் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்பார்கள். பல இடங்களில் பிந்தி வந்து முந்திப் போகும் ஆசிரியர்களாக  நாம் இருக்கக் கூடாது.

ஆகவே எமது பிள்ளைகளை இறை நம்பிக்கையுடனான விசுவாசத்தில் வளர்க்க தியாக மனப்பாங்கு அமைய வேண்டும். நான் இந்த பேசாலை பாத்திமா கல்லூரியில் கல்வி கற்றபொழுது தியாகம் நிறைந்த ஆசிரியர்களை கண்டுள்ளளேன். இவ்வாறான அந்த ஆசிரியர்களின் தியாகத்தால்தான் இன்று உங்கள் முன் நான் நின்று இந்த மறையுரையை ஆற்றுவதற்கும் திருப்பலி ஒப்புக் கொடுப்பதற்கும் வழி சமைக்கப்பட்டுள்ளது.

தியாகம் என்பது வானத்திலிருந்து எமக்கு நேரே வந்து விழப்போவதில்லை. மாறாக அது கடவுளாள் அருளப்பட வேண்டும். நாங்கள் எங்களை தயார்படுத்த வேண்டும். எமது மனங்களை நாம் தாழ்மை கொண்ட மனங்களாக ஆக்க வேண்டும். அப்பொழுது எமது தொழிலில் தூய்மை இருக்கும் கற்பித்தலில் உண்மை இருக்கும்.

இவைகள் இல்லையெனில் பிள்ளைகள் புத்தகப் பூச்சிகளாகத்தான் பாடசாலையை விட்டு வெளியேறுவர். இதனால் பிள்ளைகள் தங்கள் வாழ்வில் ஏனோ தானோ என்ற நிலைக்கு தள்ளப்படுவர்.

அத்துடன் மாணவர்களும் நமது பெற்றோருக்கு அடுத்தப்படியானவர்கள்
ஆசிரியர்கள் என உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நீங்கள்
மதிப்பளிக்கும்போது இலச்சிய வாழ்வை அடைய முடியும். இவைகள் மாணவர்கள் வாழ்வில் அமையவில்லையென்றால் மாணவர்கள் எதிர்காலத்தில் இதற்கான பலாபலன்களை அமைய நேரிடும் என்றார்.

ஆசிரியர் நெருப்பை போன்றவர்கள். மாணவர்களை உருவாக்கவும் அழிக்கவும் தன்மை கொண்டவர்கள். REV.அன்ரன் கொன்சலஸ் அடிகளார் Reviewed by Author on October 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.