அண்மைய செய்திகள்

recent
-

மரித்தோர் முன்னிலையில் கண்ணீர் சிந்தும் நாம் எமது நிலைவாழ்வையும் எண்ணிப்பார்க்க வேண்டும்-FR.S.நெவின்ஸ் பீரீஸ் அடிகளார்.


நவம்பர் மாதம் மரித்தோருக்காக ஏற்படுத்தப்பட்ட மாதம் மட்டுமல்ல. மாறாக
இது வாழ்வோருக்காகவும் ஏற்படுத்தப்பட்ட மாதம். இன்று நாம் கல்றைகளின்
முன்நின்று எமது உறவினர்களுக்காக கண்ணீர் சிந்துகின்றோம். இதேவேளையில் நமது நிலைவாழ்வையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அருட்பணி எஸ்.நெவின்ஸ் யோகராஐh பீரீஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

மரித்த ஆத்துமாக்கள் தினத்தன்று நேற்று சனிக்கிழமை (01.11.2019) மன்னார்
மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் ஆண்டகையின் தலைமையில் பேசாலை சேமக்காலையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்க்பட்டபோது அருட்பணி எஸ்.நெவின்ஸ் பீரீஸ் அடிகளார் ஆற்றிய மறையுரையில் தொடர்ந்து தெரிவிக்கையில்

இந்த மாதம் முழுதும் மரித்த உற்றார் உறவினர்கள் மற்றும் விசுவாசிகளை
நினைவு கூர்ந்து அவர்களுக்காக செபித்து திருப்பலி ஒப்புக்கொடுத்து
இறைவனின் இரக்கத்தை இரஞ்சி நிற்பதே இந்த  மாதமாகும்.

இந்த வழக்கமானது இன்று நேற்று வந்தது அல்ல. மாறாக தொடக்ககால
கிறிஸ்தவர்களின் வாழ்விலிருந்து திருச்சபையாலே பின்பற்றப்படுகின்ற ஒரு
வழிபாட்டு முறையாகும்.

தொடக்ககால கிறிஸ்தவர்கள் இறந்துபோன தங்கள் உறவினர்களின் கல்லறைக்குச் சென்று செபிப்பதையும் திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும் நாம் வரலாற்றில் காணக்கூடியதாக இருப்பதை பார்க்கின்றோம்.

கல்லறைகள் நாம் சிறப்பாக வாழ்வதற்கு சிந்தனைகளை தருகின்ற கருவறைகள். காத்திகை மாதத்தை திருச்சபை மரித்தோர் மாதமாக நினைவு கூர்ந்து வருகின்றது.

இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை மட்டுமல்ல மரித்தவர்களைப்
பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பது கத்தோலிக்கர்மட்டுமே.

நாம் மரிப்பதன் மூலமே முடிவுல்லா வாழ்வுக்கு பிறக்கின்றோம் என்ற
விசுவாசத்தை கொண்டவர்கள் நாங்கள். ஆனால் மரணத்தை நாம் சிந்திக்கும்போது அச்சம் கொள்ளுகின்றோம்.

எப்பொழுதும் நாம் எம்மைப்பார்த்து கேட்கவேண்டிய கேள்வி எதற்காக நாம்
இறக்க வேண்டும் என்பது அல்ல. மாறாக இறப்பதற்கு நாம் ஏன் பயப்பட வேண்டும் என்பதே ஆகும்.

கிறிஸ்தவ விசுவாசம் கொண்ட எமக்கு மரணம் முடிவல்ல. மாறாக அது மறுவாழ்வின் தொடக்கம். கிறிஸ்து மரித்தார் உயிர்த்தார். நாமும் ஒருநாள் உயிர்ப்போம் என்பதை கோடிட்டு காட்டுகின்றது இவரின் உயிர்ப்பு.

பவுல் அடிகளாரின் திட்டவட்டமான இறையியலின்படி இறந்தவர்கள் அனைவரும் உயிர்ப்போம். ஆனால் உயிப்புமட்டுமே எம்மை விண்ணகத்தை பெற்றுத்தராது. நாம் உயிர்பிக்கப்பட்டாலும் ஒருநாள் நடுத்தீர்ப்புக்கு நிறுத்தப்படுவோம். அப்பொழுது நாம் இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கெல்லாம் கைமாறு பெற்றுக்கொள்வோம் என நற்செய்தி கூறுகின்றது.

இறந்தவர்களை நினைவுகூறும் இந்த மாத்திலே வாழ்வதற்கு நாங்கள்
தகுதியுள்ளவர்களா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உண்மையில் நவம்பர் மாதம் மரித்தோருக்காக ஏற்படுத்தப்பட்ட மாதம் அல்ல. மாறாக இது வாழ்வோருக்காக ஏற்படுத்தப்பட்ட மாதம்.

இன்று நாம் கல்றைகளின்  முன்நின்று எமது உறவினர்களுக்காக கண்ணீர்
சிந்துகின்றோம். இதேவேளையில் நமது நிலைவாழ்வையும் சிந்தித்துப் பார்க்க
வேண்டும்.

மூவிராசாக்கள் பட்டினத்தில் வாழும் பேசாலை மக்களாகிய நாம் அவர்கள்
பெயரால் அமைக்கப்பட்ட ஆலயத்தை இன்று புனரமைத்து அதன்முன் இருந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கின்றோம்.

இவ் மூவிராசாக்கள் திவ்விய பிறந்த திவ்விபாலனை பார்ப்பதற்காக
பயணித்தவர்கள். அவ்வாறு நாமும் பயணம் செய்யும் திருச்சபையிலே
இருந்துகொண்டிருக்கின்றோம். விணணகமே எமது தாய்நாடு என்ற சிந்தனையில் நாமும் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இறைவனின் இல்லம் நாம் செல்ல வேண்டும்.
மரித்தோர் முன்னிலையில் கண்ணீர் சிந்தும் நாம் எமது நிலைவாழ்வையும் எண்ணிப்பார்க்க வேண்டும்-FR.S.நெவின்ஸ் பீரீஸ் அடிகளார். Reviewed by Author on November 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.