அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்-சிங்கள,பௌத்த வீரன் யார்?முதலிடம் சஜித்திற்காக அல்லது கோத்தவிற்கா?-

இலங்கை ஒரு சிங்கள, பௌத்தர்களின் நாடு என்கின்ற நிகழ்ச்சி நிரலிலே செல்கின்ற கோத்தபாயவாக இருக்கலாம்,சஜித் பிரேமதாஸவாக இருக்கலாம் இருவருக்குமே தமிழ் மக்களின் வாக்குகள் கிடையாது என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

-மன்னாரில் நேற்று திங்கட்கிழமை(4) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

எங்களுக்கு எதுவுமே தரமாட்டோம் என்கின்றவர்களை நீங்கள் கட்டி அனைக்க முற்படுகின்றீர்கள்.கட்டி அனைத்தாலும் பரவாக இல்லை அடக்கு முறையாளர்களையும், கொலைகாரர்களையும் ஆதரிக்கின்றார்கள். இரண்டு பகுதியினரும் தாங்கள் தான் அதிக கொலை செய்தோம் என்கின்றார்கள்.

-ஒரு பக்கம் கோத்தபாய ராஜபக்ஸ ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை படு கொலை செய்த   கொலையாளி மறு பக்கம் சஜித் என்கின்றவர் கொலைகளை செய்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பேன் என்று.

இன்றைய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை நியமித்ததிற்கு ஐக்கிய நாடுகள் சபை உற்பட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ள சூழ் நிலையில் நான் சவேந்திர சில்வாவைத் தான் தொடர்ந்தும் இராணுவத் தளபதியாக வைத்திருப்பேன் என்கின்றார்.
உங்களின் நிலை இதில் யார் சிங்கள பௌத்த வீரன் என்பது தானே தவிர தமிழர்களைப் பற்றி பேச்சில்லை.

சிங்கள, பௌத்த வீரன் யார்?முதலிடம் சஜித்திற்காக அல்லது கோத்தவிற்கா?

-தொல்பொருள் திணைக்களத்திற்கு பொறுப்பாக இருந்து கொண்டுள்ள சஜித் பிரேமதாஸ ஆயிரம் பௌத்த விகாரைகளை வடக்கு கிழக்கிலே கட்டுவேண் என்று கங்கனம் கட்டி செயல் பட்டு வரும் அந்த சஜித் பிரேமதாஸ கடந்த வருடம் வரவு செலவு திட்டத்திலே 2 ஆயிரத்து 990 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து அந்த அடிப்படையிலே செயல்படுத்துகின்ற சஜீத் பிரேம தாஸ அவர்கள் 25 மாவட்டங்களிலும் நூறு அடிக்கு மேற்பட்ட புத்தர் சிலைகளை அமைப்பேன் என்று செல்கின்ற சஜித் பிரேமதாஸ அவர்கள் பௌத்தர்கள் வாளாத மாவட்டங்களில் புத்தர் சிலைகளை வைப்பதன் நோக்கம் என்ன?
இது சிங்கள பௌத்தர்களின் நாடு என்கின்ற நிகழ்ச்சி நிரலிலே செல்கின்ற கோத்தபாயவாக இருக்கலாம்,சஜித் பிரேமதாஸவாக இருக்கலாம் இருவருக்குமே தமிழ் மக்களின் வாக்குகள் கிடையாது.

தமிழர்களின் படு கொலைக்கு ஆதரவு வழங்கியவர்கள் ஜே.வி.பி.யினர்.கொண்று குவிக்கப்பட்டமைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள். வடக்கு-கிழக்கை பிரித்தவர்கள்.

இலங்கையிலே சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சுனாமியால் உயிரிழந்த போது சுனாமியில் பலியான வடக்கு-கிழக்கைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் மறு மலர்ச்சிக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் சுனாமி கட்டமைப்பை அன்றைய   ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரத்துங்க அவர்களுடனும் நேர்வே நாட்டுடனும்  இணைந்து தயாரித்த திட்டத்தை அந்த கட்டமைப்பை அதன் தலைமைச் செயலகம் கிளிநொச்சியில் இருப்பதை சுற்றிக்காட்டி உயர் நீதிமன்றம் குறித்த திட்டத்தை நிராகரிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் இந்த ஜே.வி.பி.யினர்.கோத்தபாயவிற்கு அழிக்கின்ற வாக்கு எங்களை அழிச்சது சரி என்கின்றீர்களா?

-தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கைகளை சர்வதேசத்திற்கும்,தென்னிலங்கைக்கும் சரியாக கிடைக்கக்கூடிய விதத்திலே தமிழ் மக்களின் பொது வேட்பாளராக நிற்கின்ற எனக்கு மீன் சின்னத்திலே வாக்களியுங்கள் என தெரிவித்தார்.குறித்த ஊடக சந்திப்பில் முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்-சிங்கள,பௌத்த வீரன் யார்?முதலிடம் சஜித்திற்காக அல்லது கோத்தவிற்கா?- Reviewed by Author on November 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.