அண்மைய செய்திகள்

recent
-

2,666 பயணிகள்... கொரோனா பீதியில் சொகுசு கப்பல்: வெளியான புகைப்படங்கள் -


கொரோனா வைரஸ் பீதியால் ஜப்பானின் டோக்கியோ அருகே நங்கூரமிடப்பட்டுள்ள சொகுசு கப்பலில் பயணிகளை பரிசோதிக்க மருத்துவர்கள் குழுவை அனுமதித்துள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு உள்ளான பயணி ஒருவர் ஜப்பான் நாட்டின் Diamond Princess சொகுசு கப்பலில் பயணிப்பதாக வெளியான தகவலை அடுத்து,
குறித்த கப்பலானது டோக்கியோ அருகே தடுத்து நிறுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அந்த கப்பலில் உள்ள பயணிகள் 2,666 பேர் மற்றும் கப்பல் ஊழியர்கள் 1045 என அனைவரையும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்த 4 மருத்துவர்களை அரசு சார்ப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த மருத்துவர்கள் உரிய பாதுக்காப்புடன், கப்பலுக்குள் நுழைந்து ஆலோசனை மேற்கொள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.



மேலும், கப்பலில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை மேற்கொள்ளும் காட்சிகளும் புகைப்படமாக வெளியாகியுள்ளது.
டோக்கியோவிற்கு அருகிலுள்ள யோகோகாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள Diamond Princess சொகுசு கப்பலில்,
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த கப்பலில் ஏறிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
80 வயதான அந்த நபர் ஜப்பானுக்கு சென்று கடந்த ஜனவரி 20 ஆம் திகதி கப்பலில் ஏறியுள்ளார்.



தொடர்ந்து ஜனவரி 25 ஆம் திதி ஹாங்காங்கில் இறங்கியதாக சொகுசு கப்பல் நிறுவனம் கார்னிவல் ஜப்பான் தெரிவித்துள்ளது.
பயணிகளின் ஆரோக்கியத்தை மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு போதுமான நேரம் வழங்குவதற்காக கப்பல் குறைந்தது 24 மணிநேரம் தாமதப்படுத்தப்படும்,
மேலும் பயணிகள் கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்கலாமா என்பது தொடர்பில் மருத்துவர்களின் ஆய்வுக்கு பின்னர் முடிவு செய்யப்படும்.
ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 என கூறப்படுகிறது. இதில் 17 பேர் சீனா- வுஹான் நகரில் இருந்து ஜப்பான் திரும்பியவர்கள் ஆவார்கள்.



இதனிடையே கொரோனா நோயால் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 420 என உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

2,666 பயணிகள்... கொரோனா பீதியில் சொகுசு கப்பல்: வெளியான புகைப்படங்கள் - Reviewed by Author on February 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.