அண்மைய செய்திகள்

recent
-

சோதனை சாவடிகளை அமைத்து மக்களை துன்பப்படுத்தும் இராணுவத்தினர்

நடை பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவான இராணுவ சோதனை சாவடிகளை அமைத்து பல்வேறு விதமான சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய பாதுகாப்பு எனும் போர்வையில் அதிகளவான இராணுவ சோதனை நிலையங்களை இலங்கை அரசங்கம் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாத்திரமே அமைத்துள்ளது

வடக்கு கடல் எல்லை ஊடாக இடம் பெறும் போதை பொருள் வர்த்கத்தை குறைப்பதாக தெரிவித்து அனைத்து வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பயனிக்கும் அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்துவதுடன் உடல் சோதனைகளும் நடத்தப்படுகின்றது

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இருந்து மதவாச்சி செல்லும் பாதையில் மாத்திரம் சுமார் நான்கு சோதனை சாவடிகளை அமைத்து மக்களுக்கு வீண் அலச்சல் கொடுத்து வருகின்றனர். மாவட்டத்தை விட்டு வெளியில் செல்லும் வாகனங்கள் மாத்திரம் இன்றி மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்களையும் பரிசோதித்து வருகின்றனர்.

தேசிய பாதுகாப்பு அவசியம் எனும் போதிலும் அதிக சோதனை சாவடிகளை அமைத்து மக்களினை ஏற்றி இறக்கு வீண் அலைச்சலை ஏற்படுத்தும் செய்பாடுகளை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்து தேவையற்ற இராணுவ முகாம்களை அகற்றி மக்களின் பயனங்களை இலகுபடுத்தி தருமாறு பாதிக்கப்படும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சோதனை சாவடிகளை அமைத்து மக்களை துன்பப்படுத்தும் இராணுவத்தினர் Reviewed by Author on March 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.