அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க வேண்டுமா? இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க -


உலகம் முழுவதும் வேகமாகி பரவி பலரது உயிரைகளை கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் பறித்து வருகின்றது.
அது கொடிய நோய் என்று சொல்லப்படுவதற்கு காரணமே, அதற்கு இன்னும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாதது தான்.
இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு அன்றாட வாழ்க்கை முறை செயல்பாடுகள் மற்றும் உணவுப் பழக்கங்களில் சற்று அதிக கவனம் செலுத்தினாலே போதும், எப்பேற்பட்ட நோயும் நம்மை அண்டாமல் தடுக்கலாம்.
அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து விடுபடவும், நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவும் ஒருசில உணவுகள் உதவி புரிகின்றது. அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.



  • துளசியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். அதுவும் 5 துளசி இலைகளுடன், 3-4 மிளகு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
  • பூண்டு பற்களைப் பொடியாக நறுக்கி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து, ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிடுங்கள். இப்படி செய்தால், நோயெதிர்ப்பு மண்டலம் சீக்கிரம் வலுபெறும்.
  • ரெஸ்வெரட்ரால் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான வேர்க்கடலை, பிஸ்தா, திராட்சை, சிவப்பு மற்றும் வெள்ளை ஒயின், ப்ளூபெர்ரி, கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் டார்க் சாக்லேட் போன்றவை எடுத்து கொள்ளலாம். இவை உடலைத் தாக்கும் வைரஸ்களையும் எதிர்த்துப் போராடி பாதுகாப்பளிக்கும்.
  • தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் மற்றும் கேப்ரைலிக் அமிலம் போன்ற வைரஸ்களை எதிர்த்துப் போராடி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கத் தேவையான உட்பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே உங்கள் சமையலில் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இஞ்சியை அன்னாசிப்பூ மற்றும் தேனுடன் சேர்த்து உட்கொண்டால், நோயெதிர்ப்பு மண்டலம் பலப்படும்.
  • நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, அதில் அன்னாசிப்பூ சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை குடிக்க வேண்டும்.
  • நீரில் அன்னாசிப்பூவைப் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம் அல்லது க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீயில் சேர்த்தும் குடிக்கலாம்.
  • உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெற நினைத்தால், தினமும் வைட்டமின் சி உணவுகளை உட்கொள்ளுங்கள். எனவே நெல்லிக்காய், சிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாய், ஆரஞ்சு, கொய்யா மற்றும் பப்பாளி போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க வேண்டுமா? இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க - Reviewed by Author on March 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.