அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸை ஒரு மனிதன் எப்படி பலருக்கும் பரப்புகிறான்! அதிரவைக்கும் ஆய்வின் முடிவுகள் -


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் போது, அவரால் ஒன்பது பேருக்கு பரப்ப முடியும், இது பாதுகாப்பான தூரத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக பயணிக்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோய் மனிதர்களிடமிருந்து எளிதில் தொற்றிக் கொள்வதால், உடல்நிலை சரியில்லாதவர்களிடமிருந்து சற்றே விலகியிருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இத்தாலி மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் ஒரு மீற்றரில் இருந்து இரண்டு மீற்றர் வரை விலகியிருக்கும் படி கூறியுள்ளது. ஏனெனில் இது தும்மல் மூலம் எளிதில் பரவுவதால் இந்த அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த வைரஸ் காற்றில் அதிக நேரம் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பிளாஸ்டிக், உலோகம் போன்றவற்றிலும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஹுனான் மாகாண மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜனவரி 22-ஆம் திகதி சந்திர புத்தாண்டு பயணத்தின் போது தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஏ பற்றி ஆய்வு செய்ததாக தென் சீன மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஆய்வின் முதன்மை எழுத்தாளர் ஹு ஷிக்சியோங் கூறுகையில், நோயாளியான ஏ பயணம் செய்த நாளில் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் அப்போது நாட்டிற்கு அந்த தொற்று நோயின் நிலை குறித்து சரியாக தெரியவில்லை.
இருப்பினும் அங்கு, முழு நகரங்களும் பூட்டப்பட்டிருந்தன. அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த கட்டத்தில், மனிதர்களிடமிருந்து இந்த தொற்று நோய் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்களும் ஆய்வாளர்களிடம் இல்லை என்பதால் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், அந்த உடல்நிலை சரியில்லாத நோயாளி ஏ நான்கு மணி நேர பேருந்து பயணத்தை மேற்கொண்டார். அங்கிருந்த சி.சி.டி.வி ஆய்வாளர்களுக்கு அவர் கிருமிகளின் பகுப்பாய்வு செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது.
குறித்த பேருந்தில் இருந்த ஏழு பயணிகளுக்கு ஏற்கனவே அந்த நோய் பரவியிருந்த நிலையில், அவர் அருகில் அமர்ந்த இரண்டு பயணிகளுக்கும் பரவியது.
அதே சமயம், அந்த பேருந்தில் முக மூடி அணிந்திருந்தவர்களை, அந்த நொற்று தாக்கவில்லை. இதனால் முகமூடி அணிவது பாதுகாப்பானது என்பது உறுதியாகியுள்ளது.

அதன் பின் நோயாளி ஏ மற்றும் சக பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிய 30 நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு குழு பேருந்தில் ஏறினர். இதனால் முன் பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது.
முந்தைய குழுவிலிருந்து நோயாளி ஏ அல்லது இப்போது பாதிக்கப்பட்ட பயணிகளால் சுவாசிக்கப்பட்ட திரவ துளிகளால் அவர்கள் சுவாசித்திருக்கலாம்.


Dailymail

நோயாளி ஏ அதே நாளில் மற்றொரு பேருந்தில் சுமார் ஒரு மணி நேரம் சென்றார். அந்த நேரத்தில், வைரஸ் மற்ற இரண்டு பயணிகளிடம் பரவியது. அவர்களில் ஒருவர் சுமார் 4.5 மீற்றர் தொலைவில் அமர்ந்திருந்தார்.
பிப்ரவரி நடுப்பகுதியில் ஆய்வு முடிந்த நேரத்தில், நோயாளி A மொத்தம் 13 பேரை பாதித்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸை ஒரு மனிதன் எப்படி பலருக்கும் பரப்புகிறான்! அதிரவைக்கும் ஆய்வின் முடிவுகள் - Reviewed by Author on March 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.