அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு, கிழக்கு வேட்பாளர் எண்ணிக்கை வர்த்தமானி! தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டது -


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் எத்தனை பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்,
எத்தனை பேர் போட்டியிடலாம் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கான கட்டுப்பணம் எவ்வளவு என்பனவற்றை உள்ளடக்கிய வர்த்தமானி தேர்தல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திலிருந்து 7 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும், வேட்புமனுவில் 10 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும், சுயேச்சைக் குழுக்கள் 20 ஆயிரம் ரூபா கட்டுப் பணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்திலிருந்து 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும், வேட்புமனுவில் 9 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும், சுயேச்சைக் குழுக்கள் 18 ஆயிரம் ரூபா கட்டுப் பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும், வேட்புமனுவில் 8 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும், சுயேச்சைக் குழுக்கள் 16 ஆயிரம் ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அம்பாறை தேர்தல் மாவட்டத்திலிருந்து 7 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும், வேட்புமனுவில் 10 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும், சுயேச்சைக் குழுக்கள் 20 ஆயிரம் ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை தேர்தல் மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும், வேட்புமனுவில் 7 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும், சுயேச்சைக் குழுக்கள் 14 ஆயிரம் ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு வேட்பாளர் எண்ணிக்கை வர்த்தமானி! தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டது - Reviewed by Author on March 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.