அண்மைய செய்திகள்

recent
-

“அப்பா இனி வரமாட்டார்” 3 பெண் குழந்தைகளின் அழுகுரலால் நிரம்பியது பிரான்ஸ் மருத்துவமனை! படங்கள்)


"மருத்துவமனையில் அதிர்ச்சியான செய்தியை மருத்துவர்கள் கூறுகின்றார்கள்,  மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள், அப்பா இனி திரும்பி வரமாட்டார் "

ஜந்துபேர் அடங்கிய குடும்பத்தில் குடும்பத்தலைவனுக்கு திடீரென காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டது. அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு அறைக்குள் ஒருகிழமையாக மருந்து எடுத்துக் கொண்டு தனிமையில் இருக்கிறார்.

அவருக்கு கதவைத்திறந்து சாப்பாடு மனைவியினால் மூன்று வேளையும் வழங்கப்படும். அப்பொழுது பிள்ளைகள் கதவின் இடைவெளிஊடாக ஏக்கத்துடன் அப்பாவைப் பாப்பார்கள்.

மேலும் அவருக்கு நிலமை மோசமடைய உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு எடுத்து நிலைமையை கூறினார்கள். உடனே அம்புலன்ஸ் அழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

(29 .03 2020) மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அப்பொழுது அவருக்கோ மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ தெரியாது இனி திரும்பி வீட்ட வரமாட்டார் என்று.

மருத்துவமனையில் நிலமைமோசமடைந்தது அதனைத் தொடர்ந்து அவரது மனைவிக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பெடுத்து அழைத்து உடனே வரச்சொன்னார்கள்.

நள்ளிரவு இரண்டு மணிக்கு மருத்துவமனைக்கு சென்ற பொழுது கணவரைக் காட்டினார்கள். நிலைமை மோசமாக இருந்தது. உங்கள் உறவினர்களை அழைத்து வருமாறு கூறினார்கள். மதியம் உறவினர்கள் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டுபோனார்கள்.

"நீங்கள் அப்பாவுக்கு ( ஒவ்வா )சொல்ல வந்திருக்கிறீர்கள். அப்பாவை வழியனுப்ப வந்திருக்கிறீர்கள். அப்பாவுக்கு நீங்கள் என்ன கொடுத்துவிட போகின்றீர்கள்" பிள்ளைகளை தனியாக அறை ஒன்றினுள் அழைத்து பிள்ளைகளோடு மூன்று மனோதத்துவ வைத்தியரகள் அவர்களுக்கு தந்தையின் நிலமையை விளக்கினாரகள்.

"உங்கள்அப்பா திரும்பி வரமாட்டார் என்றும், நீங்கள் நல்லபடியாக வாழவேண்டும் என்றும் அப்பாவுக்கு ஏதும் கொடுத்து விடப்போறீங்களா என்று கேட்டாரகள்"

மூன்று பிள்ளைகளும் தங்கள் கைப்பட ஓவியம் வரைந்து கொடுத்தார்கள். அந்த ஓவியம் அப்பா, அம்மா தங்களுடன் நிற்பது போன்றும் மற்றும் அரண்மனை போன்றும், தங்கள் வீடுபோன்றும் வரைந்து கொடுத்தார்கள்.  பிள்ளைகள் தங்கள் அப்பாவரமாட்டார் என்று தெரிந்து கொள்ளமுடியாத வயதினர்கள் ஆவர்.

அப்பாவைப் பார்ப்பதற்காக மருத்துவர்கள் அழைத்துச் செல்கின்றார்கள். முழுமையாக மூடப்பட்ட சீருடை அணிந்துகொண்டு கண்ணால் மட்டும் பார்க்க முடியும் உள்ளே செல்கிறார்கள்.  படுக்கையில் ஒரு நபர் முகங்குப்புற படுத்திருந்தார். இதுதான் உங்கள் அப்பா பாருங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். குழந்தைகள் பார்த்துவிட்டு, இது எங்கள் அப்பா இல்லை, இது எங்கள் அப்பா இல்லை என்று சத்தமாக கத்தினார்கள் குழந்தைகள். மருத்துவமனையே அதிர்ந்தது.

மருத்துவமனையில் இருந்து அப்பா கோலமே மாறிவிட்டார். குழந்தைகளின் நினைவெல்லாம் அப்பா வீட்டில் இருந்து போகும் போதும் புன்னகை முகத்தோடு நடந்து போயிருந்த அப்பா அங்கே தங்களை கண்டவுடன் கட்டி அணைப்பார் என்ற எதிர்பார்ப்போடு குழந்தைகள் நுழைந்தார்கள்.


அங்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. அவர்கள் எதிர்பார்த்து போன அப்பா அங்கு இல்லை. அய்யோ அப்பா எங்கள் அப்பா எங்கே இவர் எங்கள் அப்பா இல்லை.
ஒருபக்கம் உறவினர்கள் கண்ணீரோடு. எதிர்முனையில் மனைவி கண்ணீரோடு கணவர் திரும்பி வரமாட்டார். மூன்று குழந்தைகளோடும் நான் என்ன செய்வேன் எப்படி என்னால் வழியனுப்பி வைக்க முடியும் ஐயோ. மூச்சுத்திணறி அழுது கொண்டே இருக்கின்றார்.

மருத்துவர்கள் வாயடைத்துப்போய் நிற்கின்றார்கள்,  ஐயோ நான் எப்படி உங்களை வழியனுப்பி வைப்பேன், கண்ணீரோடு மனைவி மயக்கம் போட்டு விழுந்தார்.  அம்மா, அம்மா என்று குழந்தைகள், இக்கட்டான சூழ்நிலையில் உறவினர்கள், வைத்தியர்களினதும் இதயத்தை நொருக்கியது.

இலங்கையில் நடந்த யுத்தத்தில் தப்பித்துக் கொள்வதற்காக புலம்பெயா்ந்து பிரான்ஸ் நாட்டில் குடிபுகுந்த அந்த ஜீவன், கொரோனா எனும் கோரப் பிடிக்குள் சிக்கி உயிரிழந்தது.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Villeneuve saint georges இனை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் நவரத்தினம் (வயது 52)  கடந்த (15.04.2020) புதன்கிழமை மாலை உயிரிழந்தார் .

இவா் மட்டுமல்ல கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் உயிரிழந்த இலட்சக் கணக்கானவா்களின் பின்னால் இவா்களைப் போன்றதொரு பாசப் போராட்டம் நிறைந்த கதை நிச்சயம் இருக்கும்.





“அப்பா இனி வரமாட்டார்” 3 பெண் குழந்தைகளின் அழுகுரலால் நிரம்பியது பிரான்ஸ் மருத்துவமனை! படங்கள்) Reviewed by Author on April 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.