அண்மைய செய்திகள்

recent
-

வடகொரியா அதிபர் கிம் உயிருடன் இருக்கிறார்! மர்மங்களுக்கு விடையளித்த தென்கொரிய அதிகாரி -


வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மரணம் குறித்து பல வதந்திகள் கிளம்பி வரும் நிலையில், அவர் உயிருடனும், நலமுடனும் இருப்பதாக தென்கொரியா அதிகாரி தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸிற்கு மத்தியில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னைப் பற்றிய செய்திகளும் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கின்றன.
அவர் உடல்நிலை மோசமானதால், இறந்துவிட்டதாகவும், இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வரலாம் என்றும் செய்திகள் வெளியாகின.
ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அப்படி வரவில்லை. இருப்பினும் கடந்த சில தினங்களாக கிம் ஜாங் உன் பொது வெளியில் தென்படாததே இந்த சந்தேகங்களுக்கு வழி வகுத்தது.

இந்நிலையில் இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விடையளிக்கும் வகையில், தென் கொரியா ஜனாதிபதி Moon Jae-in-இன் வெளியுறவு கொள்கை ஆலோசகர் Chung-in Moon பாக்ஸ் நியூசில், எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு உறுதியானது, கிம் வடகொரியாவின் Wonsan-ல் இருக்கும் தனது கடற்கரை விடுதியில் தங்கியுள்ளார்.
அவர் கடந்த 13-ஆம் திகதி முதல், அங்கு தங்கியிருக்கிறார். இதுவரை வடகொரியாவில் எந்த ஒரு சந்தேகத்திற்கிடமான இயக்கங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் உள்ளூர் ஊடகம் ஒன்று, கிம்மின் உடல்நிலை பற்றி எதுவும் குறிப்பிடாமல், அவர் நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு உயரடுக்கு பகுதியில் தங்கியிருப்பதாகவும், அவருக்கு சொந்தமான ரயிலும் அதற்கு அருகில் நிற்பதாக, செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் குறிப்பிட்டிருந்தது.
தற்போது தென்கொரிய அதிகாரியின் விளக்கமும், இந்த செய்தியில் வந்த தகவலும் ஒன்றாக இருப்பதால், கிம் உயிருடன் இருப்பதை கிட்டத்தட்ட உறுதிபடுத்தியுள்ளது.
வடகொரியா அதிபர் கிம் உயிருடன் இருக்கிறார்! மர்மங்களுக்கு விடையளித்த தென்கொரிய அதிகாரி - Reviewed by Author on April 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.