அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சரவையில் அமரர் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் தீர்மானம்....!!!



2020 மே மாதம் 27 ஆம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று (மே மாதம் 28 ஆம் திகதி) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சரவை பேச்சாளர்களான கௌரவ உயர் கல்வி, தொழில் நுட்பம், புத்;தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களும், கௌரவ பெருந் தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பதிரண அவர்களும் கலந்து கொண்டனர். இதன் போது தெரிவிக்கப்பட்ட விடயங்களின் சுருக்கம் பின்வருமாறு.

 கௌரவ சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.

 கௌரவ சமூக வலுவூட்டல் தோட்ட அடிப்படை வசதிகள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவு தொடர்பில் அமைச்சரவை தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தது. இதே போன்று பல தசாப்த காலமாக செயற்பாட்டு அரசியல்வாதி என்ற ரீதியில் பெருந்தோட்டத்துறை மக்களின் சேம நலத்திற்கும் உரிமைக்குமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதைப் போன்று அமைச்சரவையை பிரதி நிதித்துவப்படுத்தி இலங்கை அரசியலுக்கு அவர் வழங்கிய உன்னதமான பங்களிப்பை அமைச்சரவை விசேடமாக பாராட்டியதுடன் இனவாதமின்றி இலங்கையில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட உன்னதமான பணிகள் இதன் போது விசேடமாக நினைவு கூறப்பட்டது.

இதேபோன்று ,தோட்ட மாணவர்களுக்கு உயர்கல்விக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதற்காக நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகமொன்றை ஏற்படுத்துவது அவரது விசேட எதிர்பார்ப்பாக இருந்ததுடன், இதுவரையில் அது தொடர்பாக உயர்கல்வி அமைச்சுடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதன் போது கொட்டகலை தேசிய பல்கலைக்கழகமொன்றும் சந்ததென்ன என்ற இடத்தில் விசேட பட்டய பல்கலைக்கழகமொன்றும் அம்பேவல தாவரவியல் உயிரியல் கட்மைப்பு பல்கலைக்கழகம் ஒன்றும் என்ற ரீதியில் புதிய பல்கலைக்கழகம் ஃ உயர்கல்வி நிறுவனத்தை அமைப்பதற்காக எதிர்வரும் வாரத்தில் கல்வி அமைச்சிற்கு அமைச்சரவையினால் ஆவணமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக கௌரவ ஆறுமுகன் தொண்டமான் அவர்களை கௌரவிக்கும் வகையில் அவரது உன்னதமான எதிர்பார்ப்பான தோட்டமாணவர்களுக்காக கொட்டகலை தேசிய பல்கலைக்கழகத்தை ஒரு வருட காலத்திற்குள் விரைவாக அமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
 
ஈ.ஏ.பி எதிரிசிங்க நிதி நிறுவனம் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டதன் காரணமாக சிரமங்களுக்குள்ளான பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கோரப்பட்ட மத்திய வங்கியின் அறிக்கையை சமர்ப்பித்தல். 


ஈ.ஏ.பி எதிரிசிங்க நிதி நிறுவனம் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் வீழ்ச்சிக் கண்டமையின் காரணமாக இழப்பை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் கோரப்பட்ட அறிக்கை மத்திய வங்கி ஆளுனரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது இந்த பிரச்சினை தொடர்பில் தற்பொது நீதிமன்ற நடவடிக்கைகள் இடம் பெறுவதினால், பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கு நேரடியாக தலையீட்டை மேற்கொள்வதற்கு முடியாது என்பது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வைப்பீட்டாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நிவாரணத்தை வழங்கக் கூடிய ஆற்றல் தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் , நிதியமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் நிதியமைச்சின் செயலாளர் அவர்கள் மற்றும் மத்திய வங்கி நிதிநிறுவன மதிப்பீட்டு திணைக்களத்தின் அதிகாரிகளின் பங்களிப்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

 • கொவிட் 19 நிலைமையினால் ஏற்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு கடன் திட்டமொன்றை வகுத்தல்.

கொவிட் 19 நிலைமையினால் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நிவாரண கடன் திட்டமொன்றை வகுப்பதற்காக கௌரவ உயர்கல்வி , தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன உடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களினால் இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக, அதிமேதகு ஜனாதிபதி அவர்களினதும் கௌரவ பிரதமர் அவர்களினதும் வழிகாட்டலுக்கு அமைவாக தற்பொழுது அமைச்சரவையின் பலக்கூட்டங்களில் அது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதற்கமைவாக மக்கள் வங்கியின் மூலம் நிவாரண வட்டி விகிதத்தின் கீழ் இந்த கடன் ஆலோசனையை நடைமுறைப்படுத்துவதற்கான இறுதி பேச்சுவார்த்தை அடுத்தவாரம் மீண்டும் நடத்தப்படவுள்ளது. 

• தற்பொழுது உள்ள நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீள அழைக்கும் வேலைத்திட்டம்  .

தற்போதைய நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை மீள அழைத்துவரும் வேலைத்திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

 இதன்போது , வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மத்தியில் விசேடமாக குவைட் நாட்டிலிருந்து வருவோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியிருத்தல் போன்ற காரணத்தின் அடிப்படையில் புதிய சவால் எதிர்நோக்கப்பட்டுள்ளது. இந்த சவாலை முகாமைத்துவம் செய்து இலங்கையர்களை மீள அழைத்துவரும் பணிகளை முன்னெடுப்பதுடன் இந்த நிலைமையின் கீழும் தனிமைப்படுத்தலுக்கான வேலைத்திட்டம் அவசியம் நடைமுறைப்படுத்தப்படும்.

இதில் மாணவர்கள், அரச புலமை பரிசில் போன்றவற்றின் மூலம் வெளிநாடு சென்ற அரச ஊழியர்கள், நோயாளர்கள் , பணியாளர்கள் போன்றோர் என்ற ரீதியில் முக்கியத்துவ அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவது இடம்பெறுவதடன் இதுவரையில் ஊழியர்களை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 41 000 பேர் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் இந்த வேலைத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் சுட்டிக்காட்டப்பட்டது. 
இதில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் பணி வெளிநாடுகள் தொடர்புகள் அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் சம்பந்தப்பட்ட வேலைத்திட்டத்திற்கு அமைவாக திறன் அபிவிருத்தி , தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களினால் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.

இதில் வெளிநாடுகளில் இலங்கைக்குவரும் எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கான சம்பந்தப்பட்ட நாடுகளில் தூதரக அலுவலகம் உயர்ஸ்தானிகர் அலுவலகம் போன்ற வெளிநாட்டு தூதுவர் குழு அலுவலகத்தின் மூலம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது.

• சர்வதேச வர்த்தகம் மற்றும் சுங்க அடிப்படையிலான வரிக்கொள்கை கட்மைப்பை அறிமுகப்படுத்தல்

அதிமேதகு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்க்ப்பட்ட வர்தகம் மற்றும் சுங்கத்தை அடிப்படையாகக் கொண்ட இடைக்கால வரிக் கொள்கை குழுவின் சிபாரிசுக்கமைய தயாரிக்கப்பட்ட இடைக்கால வர்த்தக மற்றும் சுங்கத்திற்கான வரிக் கொள்கை கட்டமைப்பு நிதியமைச்சரினால் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைவாக இறக்குமதி பொருட்கள் கீழ்க்கண்ட வகையில் வகைப்படுத்தப்பட்டும் .

A பொதுவான வகையில் இறக்குமதி செய்யக்கூடிய வரையறை இல்லாத அத்தியாவசியப் பொருட்கள்

B. விசேட வர்த்தக பொருட்கள் வரியின் கீழ் விதிக்கப்படும் வரி வீதத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய பொருட்கள்

C. 90 நாட்களுக்கு மேற்படாத காலத்திற்காக விநியோகிப்பவரினால் கடன் வசதி வழங்கும் உடன்பாட்டிற்கு அமைவாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்

D . தற்காலிகமாக இறக்குமதி இடைநிறத்தப்படும் பொருட்கள் தற்போதைய நிலைமையின் அடிப்படையில் நாட்டின் அந்நிய செலவாணி வரையறுக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு தேசிய பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வர்த்தமானி அறிவிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவை மற்றும் தொடர்புபட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு ஏதாவது பிரச்சினையிருக்குமாயின் நிதியமைச்சின் செயலாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு மாத்திரம் இந்த பிரச்சினைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

• எரிபொருள் விலைக்காக சுங்க (ளுரசஉhயசபந) கூடுதல் கட்டணம் விதித்தல்.

• நிதியமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் எரிபொருள் விலைக்காக சுங்க கூடுதல் கட்டணத்தை விதிப்பதற்கான 2 வர்த்தமானி அறிவிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அரச பெட்ரோலிய உறுதிப்படுத்தல் நிதி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் திறைசேரி அதிகாரி குழுவொன்றின் மேற்பார்வையின் கீழ் இந்த நிதி முன்னெடுக்கப்படுவதுடன் எதிர்கால திட்டமொன்றின் கீழ் எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையில் உள்ள கடனை செலுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு நீண்டகால நிவாரணத்தை வழங்கக்கூடிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

• உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களினால் புதிய மதிப்பீட்டு அடிப்படையில் மதிப்பீட்டு வரி திருத்தத்தமின்றி 2 வருட காலம் வரையிலும் நடைமுறையிலுள்ள வகையில் வசூலித்தல்.

கௌரவ அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனக பண்டார தென்னக்கோன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக பொதுமக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் நோக்கில் உள்ளுராட்சி மன்றங்களினால் புதிய மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பீட்டு வரிச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளாது 2 வருட காலப்பகுதியில் நடைமுறையில் இருக்கக்கூடிய வகையில் அறவிடுவதற்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஆளுனர்களிடம் கோரப்பட்டுள்ளது.

• பொதுமக்களுக்கு கட்டுப்படக்கூடிய விலைக்கு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்

நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக நாட்டின் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படக்கூடிய விலைக்கு வீட்டொன்றை நிர்மாணிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்.

நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின்; நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட அரசாங்கம் கொண்டுள்ள காணிகளில் கட்டுப்படக் கூடிய விலைக்கு வீடொன்றை நிர்மாணிக்கும் திட்டமொன்று இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். அரச மற்றும் தனியார் கூட்டுத் திட்டமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நிவாரண வட்டிக்கு 20 -30 வருட காலத்திற்குள் கடனை செலுத்தக் கூடிய வகையில் இந்த வீடுகள் பொது மக்களுக்காக நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

• மருந்தக கூட்டுத்தாபனத்தை நிதி ரீதியில் வலுவூட்டுதல்

கௌரவ சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் திருமதி பவித்ராவன்னியாராச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக மருந்தக கூட்டுத்தாபனத்தை நிதி ரீதியில் வலுவூட்டுதல்

2019 டிசம்பர் மாதம் 31ஆம் திகதியளவில் இந்த நிறுவனத்தின் கடன் தொகை 14 பில்லியனிற்கும் மேற்பட்டதுடன் இதனால் மருந்து வகைகளை இறக்குமதி செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கமைவாக, மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி மூலம் 6 பில்லியன் ரூபா வீதம் அரச மருந்தக கூட்டுத்தாபனத்திற்கு நீண்ட கால கடனாக வழங்குவதற்கும் இந்த கடனை திறைசேரியினால் தீர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

• உள்ளூர் விவசாய துறையை மேம்படுத்தும் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுர் பால் உற்பத்தியாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டமொன்;றை நடைமுறைப்படுத்துதல்.

கௌரவ மகாவலி விவசாய, நீர்பாசன மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக, உள்ளூர் விவசாய துறையை மேம்படுத்தும் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்.

இதில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாய பால் பண்ணை அபிவிருத்தியை முன்னெடுத்து உள்ளூர் பால் உற்பத்தி தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.

• குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களின் 1.2 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம்.

கௌரவ கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக, குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1.2 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் மதிய உணவை வழங்கும் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் வலுவூட்டி கொவிட் 19 நிலைமையினால் பாடசாலைகள் மூடப்பட்டதினால் மார்ச் மாதம் முதல் இல்லாமல் போன இந்த பயனை உலர் உணவுப் பொதியொன்றாக மாணவர்களுக்கு வழங்கும் உத்தேச திட்டமொன்றை ஜுன் மாதத்தில் நடைமுறைப்படுத்துதல். 








அமைச்சரவையில் அமரர் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் தீர்மானம்....!!! Reviewed by Author on May 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.