அண்மைய செய்திகள்

recent
-

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தாத வகையில் விட்டுக்கொடுப்புடன் செயற்படவும்- 'சைனா பஜார்' வர்த்தகர்கள் கோரிக்கை

மன்னார் 'சைனா பஜார்' பகுதியில்  பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேல் நடை பாதை ஓர வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் அகற்றப்பட்ட சைனா பஸார் பகுதியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் நகர அபிவிருத்திக்கு நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படும் வகையில் யாரும் செயற்படக்கூடாது எனவும் விட்டு கொடுப்புடன் செயற்படவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறுஇ சமூக இடைவெளியை பேணி போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸாருடனும் கலந்துரையாடிய நிலையில்,அவ்விடத்தில் இருந்து சென்றனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் தெரிவிக்கையில்,,,,

மன்னார் நகர பகுதியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் மன்னார் நகர சபையின் கோரிக்கைகளுக்கு அமைவாக நாங்கள் எமது வியாபார நிலையங்களை விட்டுஇ நகர சபையால் அமைத்து வழங்கப்பட்ட வியாபார நிலையங்களுக்குச் சென்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றோம்.

நகர முதல்வரின் பணிப்புரைக்கு அமைவாக சுமார் 43 வியாபாரிகளைக் கொண்ட கடைத் தொகுதி அனைத்தையும் நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அகற்றி மன்னார் நகர் அழகு படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நாங்கள் இந்த செயற்பாட்டை முன்னெடுத்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு தான் மன்னார் தனியார் வாடகை போக்கு வரத்து சங்க உரிமையாளர்களும் அவர்களின் சேவையை செய்திருக்க வேண்டும். நாங்கள் செய்து விட்டோம். அவர்கள் பிடிவாதமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நகர சபை மீது நம்பிக்கை வைத்தமையால் சாதி இ மதம் பாராது 43 வர்த்தகர்களுக்கும் புதிய கடையை வழங்கியுள்ளார்கள்.
நாங்கள் செய்த சேவையை மன்னார் தனியார் வாடகை போக்கு வரத்து சங்க உரிமையாளர்களும் செய்ய வேண்டும்.அவர்களுக்கும் ஒரு கடை வழங்கப்பட்டுள்ளது.

அவர்களின் வாகனங்களை நிறுத்தி சேவையை மேற்கொள்ள ஓர் மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக உள்ளோம்.

எனினும் நகரத்தின் அபிவிருத்திக்கு தடையை ஏற்படுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே நகரத்தை அபிவிருத்தி செய்ய மன்னார் தனியார் வாடகை போக்கு வரத்து சங்க உரிமையாளர்கள் எங்களுடன் கைகோர்த்து விட்டுக் கொடுப்பை மேற்கொண்டு அபிவிருத்திக்கு கைகோர்ப்போம். என தெரிவித்தனர்.








அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தாத வகையில் விட்டுக்கொடுப்புடன் செயற்படவும்- 'சைனா பஜார்' வர்த்தகர்கள் கோரிக்கை Reviewed by Author on May 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.