அண்மைய செய்திகள்

recent
-

முன்னாள் ஆளுநர் எல்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவால் பகிர்ந்தளிக்கப்பட்ட ஆயுதங்கள் சஹ்ரானிடம்.....!!!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எல்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவால் பகிர்ந்தளிக்கப்பட்ட ஆயுதங்கள் சிலவற்றை சஹரான் ஹசீம் பெற்றுக் கொண்டமை தொடர்பான தகவல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.

ஊடகவியலாளர் கிறிஸ்டோபர் கமலேந்திரன் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போதே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.

கிறிஸ்டோபர் கமலேந்திரன் கடந்த 2009 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் தேசிய தௌப்பீக் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹீசீமை நேர்கண்டிருந்தார்.

இது தொடர்பிலேயே ஆணைக்குழு நேற்று (24) அந்த ஊடகவியலாளரிடம் வினவியிருந்தது.

அதாவது ´2009 ஜூலை மாதத்தில் பேருவளையில் சஹ்ரான் ஹசீமின் குழுவுக்கும் பாரம்பரிய முஸ்லிம் குழுவுக்கும் இடையில் பல தடவைகள் மோதம் ஏற்பட்டிருந்ததை அறிந்துக் கொண்டேன். காத்தான்குடியில் உள்ள ஒருவரிடம் சஹ்ரான் ஹசீமின் தொலைப்பேசி இலக்கத்தை பெற்று அங்கிருந்த அவரின் அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு டி 56 ரக துப்பாக்கிகளை கண்டேன்´ என அவர் தெரிவித்தார்.

அது குறித்து அங்கிருந்த ஒருவரிடன் வினவியபோது அவை எல்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவால் பிரதேச முஸ்லிம் மக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டதாக இருக்கலாம் என அவர் ஆணைக்குழுவில் கூறினார்.

ஆந்த துப்பாக்கிகள் எப்போது கொள்வனவு செய்யப்பட்டவை என ஆணைக்குழு அந்த ஊடகவியலாளரிடன் வினவியது.

துப்பாக்கிகள் எப்போது வழங்கப்பட்டன என்று ஆணையம் விசாரித்தபோது, அதற்கு பதிலளித்த அவர் 1993 ஆம் ஆண்டு காத்தான்குடியில் உள்ள ஒரு பள்ளிவாசல் மீது எல்.ரீ.ரீ.ஈ யினர் தாக்குதல் நடத்தியதன் பின்னர் அவை ஹிஸபுல்லாவல் பிரதேச முஸ்லிம்களுக்கு விநியோகிக்கப்பட்டவை எனக் கூறினார்.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலம் முதலே இவ்வாறு ஆயுதங்கள் விநியோகிக்கப்படடு வந்துள்ளதாக சாட்சியாளர். மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டளவில், சஹ்ரானும் அவரது குழுவும் காத்தான்குடியில் இருந்த பாரம்பரிய முஸ்லிம்களின் 100 க்கும் மேற்பட்ட வீடுகளை அழித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும் சஹ்ரானுடனான நேர்காணலில், அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தாக அந்த ஊடவியலாளர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

சஹ்ரானுக்கும் பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதல்கள் குறித்து அப்போதைய கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் எட்வின் குணதிலகவிடம் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

அப்போது கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் இது போன்ற மோதல்கள் பல உள்ளதாகவும் அவற்றை எம்மால் தீர்க்க முடியாது.

அரசியல் முரண்பாடுகளில் அரச உத்தியோகத்தர்களாகிய எம்மால் தலையிட முடியாது´ அவர் கூறியதாக பத்திரிகையாளர் கிறிஸ்டோபர் கமலேந்திரன் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே நீண்ட சாட்சியம் ஒன்றை வழங்கிய நிலையில் அது குறித்து செய்திச் சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது...


முன்னாள் ஆளுநர் எல்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவால் பகிர்ந்தளிக்கப்பட்ட ஆயுதங்கள் சஹ்ரானிடம்.....!!! Reviewed by Author on June 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.