அண்மைய செய்திகள்

recent
-

சிங்கள அரசால் திட்டமிட்டு வேட்டையாடப்பட்ட தமிழர்களின் உயிரோடு இருக்கும் இனப்படுகொலையின் பதிவு - கறுப்பு ஜீலை....

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், 1983ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.


ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களது ஆட்சிக் காலத்தில்  தமிழ் மக்களது வீடுகள், கடைகள், உடைமைகள் என்பன பட்டியலிடப்பட்டு சிங்களக் காடையர்களால் எரியூட்டி அழிக்கப்பட்டன. 1983 யூலை 24 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட இவ்வன்முறைகளால் 2000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

5000 வரையான தமிழர்களது கடைகளும் 1800 வரையான வீடுகளும் அழிக்கப்பட்டன. சிறைகளில் இருந்த 53 தமிழக கைதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். 600 வரையான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக் குட்படுத்தப்பட்டனர். இவை தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை சிங்கள அரசு மூடிமறைத்துவிட்டது.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து, தமிழ் மக்கள் மீதான சிங்கள மேலாதிக்கத்தின் பயங்கரவாதம், பல வழிகளில், பல வடிவங்களில் வெளியிடப்பட்டன.

சிங்கள அரசுகளால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட இனக்கலவரங்கள், ஆயிரக்கணக்கில் எம் மக்களை காவு கொண்டன. எமது மக்களின் உழைப்புக்கள் சூறையாடப்பட்டன. எமது கலைகள் பாரம்பரியங்கள், அடையாளங்கள் நீண்டகால நோக்கில் அழிக்கப்பட்டன.

ஈழத்து தமிழ் மக்களின், துன்பம் நிறைந்த வரலாற்றில், 1983ம் ஆண்டு யூலைப் படுகொலை ஆறாத காயத்தை ஏற்படுத்திச் சென்றது.

கைதிகளாகி, சிறைக்கம்பிகளுக்குப் பின்னால், நிராயுதபாணிகளாக நின்ற 53 தமிழர்கள், ஆயுதம் தரித்த மிருகங்களால் வேட்டையாடப்பட்டனர் உலகிலேயே எங்குமே நிகழ்ந்திராத கொடுமை இவ்  புத்த பூமியிலே நிகழ்த்தப்பட்டது.

வீடுகள், கடைகள், மத வழிய்ப்பாட்டுத்தலங்கள் எல்லாம் தமிழர்களுடன் சேர்த்து எரிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வன்முறைக்க உள்ளாக்கப்பட்டு குழந்தைகள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர்.

தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. உணர்வுகள் மறுக்கப்பட்டன, உயிர்வாழ்தலுக்கான உத்தரவாதமும் மறுக்கப்பட்டது. 1948ல் இலங்கை சுதந்திரமடைந்த பின் 1956, 1958, 1974, 1977, 1981 என்ற வரிசைகளில் தொடர்ந்த மிக மோசமான இன அழிப்பு வடிவமான இனக்கலவரங்களின், முதிர்ச்சி நிலையை  1983ம் ஆண்டுக் கலவரம் வெளிப்படுத்துகிறது..

ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தமிழர்களை தேடி தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி, தமிழர்கள் இந்த வன்முறைகளில் கொலையும் செய்யப்பட்டார்கள்.

இந்த வன்முறை சம்பவத்தினால் பல தமிழர்கள் வெட்டி கொலைசெய்யப்பட்டதாகவும், பலர் எரியூட்டி கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பின்னணியில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.

இந்த நிலை இன்றும் தொடர்கின்றது. சிங்கள இனவாத அரசினால் தமிழ்ப் பிரதேசங்கள் கேட்பாரற்று வேட்டையாடப்பட்டு “முள்ளிவாய்க்கால்” வரை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இலங்கையில் தமது சொத்துக்களை, சொந்தங்களை இழந்த பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் இன அழிப்புக்கு இந்த வன்முறை முதல் முதலில் வித்திட்டதாக இன்றும் தமிழர்கள் கூறி வருகின்றனர்.

'கறுப்பு ஜுலை என்பது தமிழர்களுக்கு மாத்திரமன்றி, சிங்களவர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்திய ஒரு சம்பவம். கறுப்பு ஜுலை சம்பவத்தினால் சிங்கள மக்களை சர்வதேச சமூகம் தவறாக கோணத்தில் பார்த்தது. இது சிங்கள மக்களுக்கும் கறுப்பு ஜுலை. அதுக்கு பிறகே 30 வருட கால யுத்தம் வந்தது. யுத்த காலப் பகுதியில் மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு போனார்கள். அவர்களின் சொத்துக்கள் இல்லாது போனது. இரண்டு பக்கமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். கறுப்பு ஜுலையின் ஆரம்பமே அது. அன்று அதை அரசியல் ரீதியில் நிறுத்தியிருந்தால், இன்று இலங்கைக்கு இவ்வளவு பெரிய அழிவு வந்திருக்காது....









சிங்கள அரசால் திட்டமிட்டு வேட்டையாடப்பட்ட தமிழர்களின் உயிரோடு இருக்கும் இனப்படுகொலையின் பதிவு - கறுப்பு ஜீலை.... Reviewed by Author on July 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.