அண்மைய செய்திகள்

recent
-

இணையத்தின் ஊடாக வெளிநாட்டவரிடம் பண மோசடி.......

இணையத்தின் ஊடாக வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் ஊடாக கடன் வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கிருலபன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிட்டபத்தர, நாரஹேன்பிட்ட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடன் வழங்குவது தொடர்பில் வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு தொலைபேசியூடாக தொடர்புகொண்டு அவர்களுடைய வங்கி விபரங்களை பெற்று அதனூடாக ஒருவரின் கணக்கில் இருந்து 5 இலட்சம் ரூபா வீதம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து பண மோசடி செய்யப்பட்டதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து மடிக்கணிணி ஒன்று, வங்கி அட்டைகள், லெமினேட் இயந்திரம் ஒன்று, போலி ரபர் ஸ்டேம் 02, போலி சாரதி அனுமதி பத்திரங்கள் 61, அதற்காக பயன்படுத்தும் அட்டைகள் 925 மற்றும் சர்வதேச சாரதி அனுமதி பத்திரங்கள் 5 உம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிருலபன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது...




இணையத்தின் ஊடாக வெளிநாட்டவரிடம் பண மோசடி....... Reviewed by Author on July 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.