அண்மைய செய்திகள்

recent
-

தலைமறைவான பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய மக்களின் உதவி...........

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்காக தற்போது விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
குறித்த பொலிஸ் பரிசோதகர், இலக்கம் 189, கிரிகத்த, வெலிவேரிய பகுதியை சேர்ந்த வெஹெரவத்த கங்கானமலாகே வசந்த குமார எனும் 49 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது. அந்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவல் வழங்கும் நபர்களின் இரகசிய தன்மை பேணப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் 071 859 17 67 / 0112 42 21 76 என்ற இலக்கங்களிற்கு அழைப்பு ஏற்படுத்தி பொலிஸ் அதிகாரி தொடர்பில் அறிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்...

தலைமறைவான பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய மக்களின் உதவி........... Reviewed by Author on July 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.