அண்மைய செய்திகள்

recent
-

மகிந்த ராஜபக்ஸவே பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளது .........

2020 தேர்தலானது மிகவும் இக்கட்டான சூழ்னிலையில் நடை பெற்றுவருகின்றது இந்த தேர்தல் நடை பெறும் காலப்பகுதியில் கோட்டபாய ராஜபக்ஸவே ஜனாதிபதியாக உள்ளார் அவருடைய சகோதரர் மகிந்த ராஜபக்ஸவே பிரதமராக வர அதிகம் வாய்புள்ளதாக  யாழ் மாவட்ட வேட்பாளரும் புளொட் இயக்கத்தின் தலைவருமான சித்தாதன் தெரிவித்துள்ளார்.....

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட் கட்சி சார்பாக 2020 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள புளொட் வேட்பாளர்களின் மன்னார் மாவட்டத்திற்கான தேர்தல் இணைப்பு அலுவலகமானது இன்று காலை 11 மணியளவில் பனங்கட்டுகொட்டு பகுதியில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது அதன் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் 

அவர் மேலும் தெரிவிக்கையில்.

இம் முறை தேர்தலில் மிக பெரும்பான்மையில் அவர்கள் வருவார்கள் மூன்றில் இரண்டு பெறும்பான்மையை பற்றி கதைத்தாலும் அவர்கள் 120-130 வரையான ஆசங்களில் வருவதாக நம்புகின்றார்கள் இருந்தாலும் அவர்கள் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் 19வது திருத்ததை இல்லாமல் செய்வது அதே நேரத்தில் அவருடைய கட்சியில் உள்ள விமல் வீரவம்ச உதயன் கம்பின் பொல போன்றவர்கள் 13 ஆம் திருத்த சட்டத்தையும் இல்லாமல் ஆக்கும் நோக்கத்துடன் இருப்பவர்கள் .....

ஆனாலும் இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது,,,,

இப்பிடியான சூழலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைத்து விட வேண்டும் என்ற நோக்கில் பல கட்சிகள் வடக்கு கிழக்கில் இறக்கி விடப்பட்டுள்ளார்கள் அரசாங்கத்தை சேர்ந்த கட்சிகளே பல கட்சிகளாக தேர்தலில் வாக்கு கேட்கின்றார்கள் இப்படி இருக்கும் போது அவர்களின் உறவுகள் முலமே வாக்குகளை பிரித்து விடலாம் என்று ஏனையவர்கள் நினைக்கின்றார்கள்...
 
எனவே மக்கள் இதை எல்லம் மனதில் கொண்டும் கடந்த காலத்தை கொண்டும் வாக்களிக்க வேண்டும் என தெரிவுத்துள்ளார்...

குறித்த நிகழ்வில் புளொட் கட்சியின் தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.சித்தார்தன் மற்றும் புளொட் கட்சி சார்பாக வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் திரு.சிவலிங்கம் அவர்கள் முன்னால் மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன்  கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்..


மகிந்த ராஜபக்ஸவே பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளது ......... Reviewed by Author on July 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.