அண்மைய செய்திகள்

recent
-

நான் மற்றவர்களை போல் அனாகரிகமான அரசியல் செய்ய மாட்டேன் ....!!!

மாற்று கட்சியினர் என்னை விமர்சனம் செய்ய செய்ய நான் வளர்ந்து கொண்டே தான் இருப்பேன். என்னை விமர்சிப்பவர்கள் எனக்கு ஒரு தூணாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முதற்கண் தாம் நன்றியினை தெரிவித்து கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்...

டிக்கோயா தரவாளை தோட்ட பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும்​ போதே அவர் இதனை தெரிவித்தார்...

இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான மறுதபாண்டி ராமேஸ்வரன், கணபதி கணகராஜ் என பலரும் கலந்து கொண்டனர்....

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களோடு இருந்த தொடர்பினை கடந்த காலங்களில் இழந்து விட்டது. ஏன் எனில் எனது தந்தை முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை மக்கள் சந்திப்பதற்கு சென்றால் அவரை சந்திப்பதற்கு மற்றவர்கள் உள்ளே விடுவதில்லை....

இது திட்டமிட்டு மக்களையும் தலைவரையும் பிரித்தார்கள். அநேகமான தோட்டபகுதியில் மாற்றுகட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த உறுப்பினர்கள் கட்சியில் இருந்தோ ஆறுமுகன் தொண்டமானை விட்டோ பிரிந்ததிற்கு ஒருபோதும் ஆறுமுகன் தொண்டமான் காரணமில்லை அதற்கு காரணம் அவரை சுற்றி இருந்த ஒரு சிலர்தான் என அவர் தெரிவித்துள்ளார்....

அபிவிருத்தி தொடர்புபட்ட விடயத்தினை நாம் நேரடியாக கண்கானித்து இருந்தால் அபிவிருத்திகள் சிறந்த முறையில் இடம்பெற்றிருக்கும். இவை அனைத்தும் சிபாரிசு ஊடாக இடம்பெற்றமையால் தான் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டது....

தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தினை கோரியது சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல. தமது பிள்ளைகளின் கல்விக்கும் வாழ்வாதாரத்திற்கும் தான் கோரினார்கள். நான் யாரையும் கூரை கூறுவது இல்லை. சிலர் கூறுகிறார்கள் ஜீவன் தொண்டமானுக்கும் மலையகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென மலையகத்தில் உள்ள வீதிகள் சில இன்னமும் மோசமான நிலையிலே காணப்படுகிறது...

நான் மற்றவர்களை போல் அனாகரிகமான அரசியல் செய்ய மாட்டேன் முன்னாள் அமைச்சர்கள் தான் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டார்கள் என நான் கூறமாட்டேன் மலையகத்தில் போதை பொருள் காணப்படுகிறது. இதனை நாம் இல்லாதொழிக்க வேண்டும். இன்று தோட்ட பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் சேதமடைந்து கானப்படுகிறது.

இதனை நாம் எதிர்காலங்களில் மாற்றியமைக்க வேண்டும் தோட்ட தொழிலுக்கு மாத்திரம் தான் மலையக மக்கள் உள்ளார்கள் என சிலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இன்று மலையகத்திலும் அநேகமான பட்டதாரிகள் உருவாகியிருக்கிறார்கள். மலையகத்தில் உள்ள படித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்பினை உருவாக்கவேண்டும். ஒரு சமூகத்தில் பத்து பெண்கள் மாத்திரம் படித்து வெளிவந்தால் போதாது எதிர்வரும் காலங்களில் மலையகத்தில் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகளும் முன்வரவேண்டுமென அவர் கேட்டு கொண்டார்..


நான் மற்றவர்களை போல் அனாகரிகமான அரசியல் செய்ய மாட்டேன் ....!!! Reviewed by Author on July 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.