அண்மைய செய்திகள்

recent
-

மண் சரிவில் இரு வீடுகள் சேதம்!

நுவரெலியா – கொட்டகலை, பத்தனை பிரதேசத்தில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகளும், தொழிற்சங்க அலுவலகமொன்றும் சேதமடைந்துள்ளன.

 மலையகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழைக் காரணமாக மண்சரிவு அனர்த்தங்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று (17) இரவு இந்த மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டது. 

 இதன்போது வீடுகள் மற்றும் தொழிற்சங்க அலுவலகத்துக்கு பின்புறத்திலேயே மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இரு வீடுகளில் இருந்த எட்டு பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மண் சரிவில் இரு வீடுகள் சேதம்! Reviewed by Author on September 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.