அண்மைய செய்திகள்

recent
-

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி: மூவர் படுகாயம்.

 மன்னார் மடு    பிரதான வீதியில்   இன்று (18) அதிகாலை 5.45 மணியளவில்     இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.


நீர்கொழும்பு பகுதியில் இருந்து நான்கு பேர் கார் ஒன்றில் மடுத் தேவாலயம் நோக்கி பயணித்த நிலையில், மதவாச்சி வீதியூடாக மடு சந்தியை வந்தடைந்த நிலையில், மடு  பிரதான வீதி  ஊடாக மடுத் தேவாலயம் நோக்கி சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மடு தேவாலயத்தில் இருந்து சில கிலோ மீற்றர் தூரத்திற்கு முன்பு அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்பு, வீதியை விட்டு விலகி மரத்தில் கார் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து காயமடைந்த மூன்று பேரையும் மேலதிக சிகிச்சைக்காக பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


உயிரிழந்த  சிரோமி லக்சிகா மாரி பெர்னாண்டோ   ( வயது - 55)   என்ற பெண்ணின் சடலம், பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலும் சாரதியின் தூக்கக்கலக்கத்தில் இந்த விபத்து இடம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பாக மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











மடு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி: மூவர் படுகாயம். Reviewed by Vijithan on October 18, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.