அண்மைய செய்திகள்

recent
-

இந்து சமுத்திரம் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு

இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டும் என ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் முதன்முதலில் இலங்கையே பிரேரணை முன்வைத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 தென்கொரியா, ஜேர்மன், வத்திக்கான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கான புதிய நான்கு தூதுவர்கள் இன்று ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். இதன்போது இலங்கையில் கொரோனா தொற்றினை வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமை தொடர்பாக புதிய தூதுவர்களும் இதன்போது ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

 கொழும்பை தளமாகக் கொண்ட புதிய தூதர்களுடனான கலந்துரையாடலின் போது, சினேகபூர்வு உறவுகளுடன் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். மேலும் மூலோபாய பெறுமதியான இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை, மத்தியஸ்த வௌிநாட்டுக் கொள்கையை பின்பற்றுவதாகவும் கூறினார்.

 அத்தோடு சீனாவின் நிதியுதவியுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பது மகத்தான வளர்ச்சி திறன் கொண்ட ஒரு திட்டம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார், இருப்பினும் சிலர் இதை ‘கடன் பொறி’ என்று அழைக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார். அதனால் இலங்கை மீது பல இராச்சியங்களின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்

.
இந்து சமுத்திரம் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு Reviewed by Author on October 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.