அண்மைய செய்திகள்

recent
-

பேருவல மீன்பிடி துறைமுகத்தில் 20 பேருக்கு கொரோனா: மீன்பிடி துறைமுகத்துக்கு தற்காலிக பூட்டு

பேருவல மீன்பிடி துறைமுகத்தில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பேருவல மீன்பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, பேருவல மீன்பிடி துறைமுகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100மீனவர்களுக்கு பி.சி.ஆர்.சோதனை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அவர்களது பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் 20பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இவர்கள் அனைவரும் பேருவல மீன்பிடி துறைமுகத்தில் நீண்டகாலமாக தொழில் புரிகின்றவர்கள். குறித்த 20 பேரும் பேருவல, முங்ஹேன, மொரகொல்ல, மருதானை, நல்லஹேன, மக்கொன ஆகிய பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்களாவர். இவ்விடயம் தொடர்பாக களுத்துறை தேசிய சுகாதார நிறுவனத்தின் மாவட்ட நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் கூறியுள்ளதாவது, “நேற்று மாலை அலுத்கம பேருந்து நிலையத்தில் 74 மாதிரிகள் எடுக்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. 

மேலும்,அலுத்கமவில் மீன் பிடி தொழிலில் ஈடுபடும் ஒருவரின் செயற்பாடு, நேர்மறையாக இருந்தது. இதனால் பேருவல துறைமுகத்தில் நாங்கள் எடுத்த 100 மாதிரிகளில் ஏராளமானவை நேர்மறையானவை ஆகும். எனவே, குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிகப்பட்டவர்கள் அதிகளவு இனங்காணப்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய அச்சமான சூழ்நிலை பேருவல பகுதியில் ஏற்பட்டுள்ளமை காரணமாகவே பேருவல மீன்பிடி துறைமுகம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


 இந்நிலையில் 700 மீனவர்கள் மற்றும் அவர்களளுடன் நெருங்கி பழகியவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகள் இன்று நடத்தப்படவுள்ளன. இதற்கிடையில், பேருவல பிரதேச சபை கட்டடம் மற்றும் அலுத்கம மீன் சந்தை வளாகத்தை மூட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருவல மீன்பிடி துறைமுகத்தில் 20 பேருக்கு கொரோனா: மீன்பிடி துறைமுகத்துக்கு தற்காலிக பூட்டு Reviewed by Author on October 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.