அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் 96 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் விதையனைத்தும் விருட்சமே குழுவினரால் வழங்கப்பட்டது.

கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 96 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று(15) வழங்கி வைக்கப்பட்டது.

 அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் வெள்ளாங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டம் இன்று (15) காலை9 மணிக்கு பாடசாலை அதிபர் .ம.சாந்தரூபன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது இதில் பாடசாலை அதிபர் ம.சாந்தரூபன் மற்றும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் உறுப்பினர்களால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 அதனை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் மூன்றாம்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 36 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டம் இன்று காலை பத்து மணிக்கு பாடசாலை பிரதி அதிபர் திரு.க.நாகேந்திரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது இதில் பாடசாலை பிரதி அதிபர் திரு.க.நாகேந்திரன் மற்றும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் உறுப்பினர்களால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 அதனை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் தேவன்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலய பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டம் இன்று காலை பதினெரு மணிக்கு பாடசாலை அதிபர் திரு. சீ.டனிஸ்ரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

  இதில் மன்னார் மாவட்டத்தில் தேவன்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலய பாடசாலையின் அதிபர் திரு. சீ.டனிஸ்ரன் பாடசாலையின் பிரதி அதிபர் அருட்தந்தை லெபோன் அடிகளார் மற்றும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் உறுப்பினர்களால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டமானது வடக்கு கிழக்கில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் வருடம் தோறும் அதிஸ்ரலாப சீட்டிழுப்புக்களை நடத்தி அதில் வரும் பணத்தில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது குறித்த செயற்றிட்டத்தின் ஊடாக 2019 ம் ஆண்டு வடக்கு கிழக்கில் 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்த்தை முன்னெடுத்திருந்தது.

 அந்த வகையில் 2020 ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அதிஸ்ரலாப சீட்டிழுப்பின் ஊடாக சேர்க்கப்பட்ட பணத்தைக் கொண்டு இம்முறையும் யாழ்ப்பாணம் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 மாணவர்களை இலக்காக கொண்டு ஒரு மாணவருக்கு தலா 2000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கும் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
































மன்னார் மாவட்டத்தில் 96 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் விதையனைத்தும் விருட்சமே குழுவினரால் வழங்கப்பட்டது. Reviewed by Author on January 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.