அண்மைய செய்திகள்

recent
-

Pfizer கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Pfizer கொரோனா தடுப்பூசியை நாட்டில் பயன்படுத்த ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, 05 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார். இதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 1,50,000 – இற்கும் மேற்பட்டோருக்கு AstraZeneca Covax தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

 மேலும் 6 இலட்சம் Covax தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அதற்கமைய, Covax தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலாம் கட்டத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு 12 முதல் 16 வாரங்களுக்குள் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சுட்டிக்காட்டினார். 

Pfizer கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி Reviewed by Author on May 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.