அண்மைய செய்திகள்

recent
-

ஹட்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு கொரோனா!

வெலிசர விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் இன்று (01) பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது 140 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில முடிவுகள் கிடைக்கப்பெறவுள்ளதாவும், தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 இதேவேளை, லக்ஷ்பான நீர் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் மேலும் 09 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த ஆலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஹட்டன், டன்பார் தோட்டம் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது

ஹட்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு கொரோனா! Reviewed by Author on May 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.