அண்மைய செய்திகள்

recent
-

ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்!

“ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க சார்? மிஞ்சிப்போனா ஒரு 5 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா ஒரு 8 லிட்டர்? நீங்க சாப்பிடுறதுனால, உங்களை தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கா சார்..?”

 யானைகள் அப்படி என்ன பெரிதாக செய்து விடுகிறது என்று கேட்கும் அறிவாளிகளுக்கு இதைவிட எளிமையாக என்னால் பதிலளிக்க முடியவில்லை. யானைகள் மிக எதார்த்தமான குழந்தைகள். யானை எனும் பேருயிரியின் மீதான என் காதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. யானைகள் குறித்த புத்தகம் ஒன்றும் தயாராகி வருகிறது. அந்த புத்தகத்தின் ஒரு சிறிய பகுதி இதோ.. “ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும் சார். ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 – 250 கிலோ உணவு சாப்பிடும் சார். சராசரியா அதனோட உடல் எடையில இருந்து 5 சதவிகித உணவை சாப்பிடும். ஒரு நாளைக்கு ஒரு யானை 100 – 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இந்த 250 கிலோ உணவுங்கிறதுல, 10 சதவிகிதம் விதைகள் இருக்கும். அதாவது 25 கிலோ விதைகள், குச்சிகள் இருக்கும். 

அதுல கடைசிக்கும் கடைசியா 10 கிலோ விதைகளும் குச்சிகளும் திரும்ப மண்ணுல விதைக்கப்படும். நினச்சுப் பாருங்க, ஒவ்வொரு யானையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கிலோ விதைகளை விதைக்குது சார்! எண்ணிக்கையில சொல்லணும்னா, சராசரியா ஒரு யானை ஒரு நாளைக்கு 300 – 500 விதைகளை விதைக்குது…” வனவிலங்கு மருத்துவர் கலைவாணன் புள்ளி விவரங்களை சொல்லிமுடிக்கும் போது, அந்தப் பேருயிரிகளின் பிரமிக்க வைக்கும் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. 500 விதைகளில் குறைந்தது 100 விதைகளாவது முளைத்து விடும். இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கை தான். 

 அப்படியென்றால், ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. வருடத்திற்கு 36 ஆயிரத்து ஐநூறு மரங்கள். மொத்தமாகப் பார்த்தால் ஒரே ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது. மீண்டும் சொல்கிறேன், இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கை தான்! இன்னும் ஆச்சரியங்கள் காத்திருந்தன. “இப்போ இவ்வளவு சாப்பிடணும்னா அது எவ்வளவு பயணம் செய்யணும்? இப்பல்லாம் நம்மளால இந்த இத்துனூண்டு உடம்ப தூக்கிட்டு 10 கிலோமீட்டர் கூட சேந்தாப்புல நடக்க முடியல.


– நரேஷ் க்ரீன்.






ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 லட்சம் மரங்களை விதைத்தற்கு சமம்! Reviewed by Author on July 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.