அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 23 மில்லியன் ரூபா பெறுமதியுடைய இரத்த மாற்று இயந்திரம் கையளிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின்'எதிர்க் கட்சியிலிருந்து ஒரு மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவில் உருவாகி, நாடளாவிய ரீதியாக செயற்பட்டுத்தப்பட்டு வரும் 'ஜன சுவய' திட்டத்தின் 20 ஆவது கட்டமாக மன்னார் மாவட்ட பொது வைக்த்திய சாலைக்கு 23 மில்லியன் இருபதாயிரம் ரூபா (2,320,000.00) மதிப்புள்ள இரத்த மாற்று இயந்திரம் இன்று(06) எதிர்க்கட்சி அலுவலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் கே.செந்தூர்பதிராஜா விடம் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது. 

 குறித்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட துணைத் தலைவர் ராஜித சேனரத்ன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான , செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன் கோவிந்தன் கருணாகரம், சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் ‘ஜன சுவய’ கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு 'எதிர்க் கட்சியிலிருந்து ஒரு மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.




மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 23 மில்லியன் ரூபா பெறுமதியுடைய இரத்த மாற்று இயந்திரம் கையளிப்பு! Reviewed by Author on July 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.