அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கொரோனா காரணமாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்ந்தும் பாதிப்பு

கொரோனா தொற்று மற்றும் முடக்கநிலை காரணமாக மன்னார் மாவட்டதில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் மீள முடியாத கடன் சுமையில் தவிப்பதாகவும் மன்னார் மாவட்ட வளர்பிறை பெண்கள் அமைப்பினர் சுட்டிகாட்டியுள்ளனர் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கதின் ஏற்பாட்டில் அதன் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் தலைமையில் மாவட்ட பெண் செயற்பாட்டாளர் மேரி பிரியங்கா ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற கூட்டத்திலே வளர்பிறை பெண்கள் அமைப்பின் தலைவி K.றீற்றா மேற்படி விடயத்தை சுட்டிகாட்டியுள்ளார்

 அவர் மேலும் தெரிவிக்கையில் கொரோனா காரணமாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் மீனவ பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் அதே நேரம் தங்களின் சுயதொழில் உற்பத்தி பொருட்களையோ மீன்களையோ சந்தைபடுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் சந்தைபடுத்தினாலும் உரிய விலை கிடைப்பதில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர் இது ஒரு புறம் இருக்க நுண் நிதி நிறுவனங்களின் கடன்களில் சிக்கியும் அவற்றை கட்ட முடியாத நிலையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் செய்வதறியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர் 

 அதே நேரம் அரசாங்கத்தின் வீட்டு திட்ட நிதியும் பலவருடங்கள் கடந்தும் வழங்கப்படாமையினால் அதன் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையையும் சமாளிக்க முடியாத நிலையில் தற்கொலை செய்ய வேண்டிய நிலையே காணப்படுவதாகவும் மன்னார் மாவட்ட வளர் பிறை அமைப்பினர் தெரிவித்துள்ளனர் எனவே அரசாங்கம் விரைவில் மக்களுக்கான நிவாரண உதவிகளையோ அல்லது வீட்டு திட்டங்களுக்கான மிகுதி பணத்தையோ அல்லது மாற்றுத்தொழில் வாய்ப்புக்களையோ ஏற்படுத்தி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்
               







மன்னாரில் கொரோனா காரணமாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்ந்தும் பாதிப்பு Reviewed by Author on August 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.