அண்மைய செய்திகள்

recent
-

மருந்துகளிற்கு பற்றாக்குறை – உயிரிழப்புகள் ஏற்படலாம் - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்

தீவிரகிசிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிற்கு அவசியமான மருந்துகளிற்கு பற்றாக்குறை நிலவுவது குறித்து அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. மயக்கமருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுவதால் நாட்டில் தேவையற்ற மரணங்கள் இடம்பெறலாம் என சங்கத்தின் ஊவா மாகாண கிளையின் தலைவர் பாலிதராஜபக்ச தெரிவித்துள்ளார். 

மயக்கமருந்துகளிற்கு பெரும் பற்றாக்குறை காணப்படுகின்றது இது தீவிரகிசிச்சை பிரிவுகளில் உள்ள நோயாளிகளிற்கு கிசிச்சை வழங்குவதை பாதிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் ஒக்சிசன் தேவைப்படுபவர்களும் சத்திரசிகிச்சை செய்யவேண்டியவர்களும் பாதிக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இதற்காக பல மருந்துகள் தேவைப்படுகின்றன ஆனால் மருத்துவமனைகளிலும் மத்தியகளஞ்சியத்திலும் இந்த மருந்திற்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். தீவிரசிகிச்சை பிரிவுகளில் உள்ள கொரோனா நோயாளிகளிற்கு இவை அவசியமான மருந்துகள் என தெரிவித்துள்ள அவர்இந்த மருந்துகளிற்கு பற்றாக்குறை நிலவுவதால் அவர்கள் ஆபத்தான நிலையை எதிர்கொள்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகளிற்கு பற்றாக்குறை – உயிரிழப்புகள் ஏற்படலாம் - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் Reviewed by Author on August 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.