அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்,இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருக்கு அவசர கடிதம்.

மன்னார் மாவட்டத்தில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் அமைக்கப்பட்ட மன்னார் தாழ்வுபாடு ஆயர் ஜோசப் பயிற்சி நிலையம் தொடர்பாக மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்,இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருக்கு இன்று (6) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,, மன்னார் மாவட்டத்தில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் அமைக்கப்பட்ட மன்னார் தாழ்வுபாடு ஆயர் ஜோசப் பயிற்சி நிலையம் தொடர்பாக தங்களின் மேலான கவனத்திற்கும் ஆலோசனைக்கும் பின்வரும் விடயங்களை முன்வைக்கின்றோம்.

 தற்போதைய சூழ்நிலையில் எமது நிர்வாக செயற்பாடுகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு காணப்படுகின்றது. மேற்படி மைதானத்திற்கு வருடாந்தம் சுமார் 3,50 000. 00 வரையான தொகை தங்களால் ஒதுக்கப்படுவதாகவும் மைதானத்தில் எவ்வித புனரமைப்பு பராமரிப்பும் செய்யப்படவில்லை எனவும் இதுவரை மொத்தமாக சுமார் 55 இலட்சம் வரையில் நிர்வாகம் கொள்ளையிட்டுள்ளதாகவும் தகவல் கடந்த வாரம் பரப்பப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக தங்களின் வருடாந்த பொதுக்கூட்ட கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதான காவலாளியாக செயற்பட்ட ஜெகதீபன் என்பவருக்கு மாதாந்தம் நாங்கள் 40 –50 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்துள்ளதாகவும் லீக்கானது தமக்கு 10 ஆயிரம் மட்டுமே வழங்கியுள்ளதாகவும் இன்று அவரால் செய்தி பரப்பப்பட்டுள்ளது. இத் தவறான செய்திகளை நாம் கண்டிக்கிறோம். இது தொடர்பாக எமது பின்வரும் தகவலை தங்களுக்கு உறுதிப்படுத்துகிறோம். மைதானம் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக எமது லீக்கிற்கு இதுவரை எவ்வித நிதியும் தங்களால் வழங்கப்படவில்லை. 

 ஜெகதீபன் என்பவரின் சம்பளம் தங்களால் நேரடியாக அவருக்கு வழங்கப்பட்டது என்பதையும் அவரின் கொடுக்கல் வாங்கல்கள் லீக் ஊடாக நடைபெறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 2018 ஆம் ஆண்டுடன் மைதான காவலாளிகளுக்குரிய வேதனம் தங்களால் இடைநிறுத்தப்பட்டதிலிருந்து எம்மால் மைதானத்தை பராமரிக்க முடியவில்லை. இது தொடர்பாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பல எக்ஸ்கோ மற்றும் கவுன்சில் கூட்டங்களில் எம்மால் சுட்டிக்காட்டப்பட்டது டன் மீள வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இருந்தும் இதுவரையில் மீள வழங்கப்படவில்லை. இதனால் இம்மைதானமானது எம்மால் கைவிடப்படவுள்ளதாகவும் அக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 முதல் எம்மால் பராமரிக்க முடியாமல் கைவிடப்பட்டது.

 2018 ன் பின்னர் தான் மைதானம் கைவிடப்பட்ட பராமரிப்பற்ற நிலையில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. எனவே மேற்படி இரு விடயங்களுக்குமான தெளிவூட்டலை நாம் எமது கழகங்களுக்கும் வலையமைப்பினருக்கும் வழங்க வேண்டியுள்ளதால் தயவு செய்து இவ்விடயம் தொடர்பான விளக்கத்தை எமக்கு வழங்கி உதவுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம். ( இவ் வேண்டுகோளை தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் ,சம்மேளன மின்னஞ்சல் முகவரிக்கும் கடந்த மாத இறுதியில் நாம் அனுப்பியுள்ளோம்.) எனவே எமது நிலைப்பாட்டை தாங்கள் புரிந்து கொண்டு எமக்கு தேவையான ஆவண உறுதிப்படுத்தலை வழங்கி உதவுமாறு மீண்டும் பணிவுடன் லீக் நிர்வாக கூட்டத்தின் தீர்மானத்துக்கமைய வேண்டுகின்றோம். 

 மேலும் 13.06.2018 அன்று இம்மைதானத்தை மீள் புனரமைப்பு செய்து எமது பயன்பாட்டிற்கு வழங்குமாறு எழுத்து மூலம் கோரியிருந்தோம். 15.07.2021 அன்று மன்னாருக்கு விஜயம் செய்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உப தலைவர் ரஞ்சித் ரொட்றிகோ அவர்களிடமும் இம் மைதான புனரமைப்பு தொடர்பான கோரிக்கை வைத்தபோது தங்களுடன் கலந்துரையாடி இம்மைதானத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுவதாகவும் எமக்கு உறுதியளித்துள்ளார் கள். நீண்ட கால தேவையாக நாம் கோரும்; எமது மைதான புனரமைப்பை புதிய நிர்வாகமாகிய தாங்கள் எமது பயன்பாட்டிற்கு உகந்ததாக அமைத்து தருமாறு வினயமாக வேண்டுகின்றோம்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடத்தக்கது









.
மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்,இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருக்கு அவசர கடிதம். Reviewed by Author on August 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.