அண்மைய செய்திகள்

recent
-

மருத்துவ தர ஒட்சிசனின் பயன்பாடு குறைந்துள்ளது - சுகாதார அமைச்சு

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும் போது வைத்தியசாலைகளில் மருத்துவ தர ஒட்சிசனின் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நாளாந்த ஒட்சிசன் உற்பத்தியானது சுமார் 80 தொன்னாகும். அத்துடன் நாளாந்தம் ஒட்சிசன் நுகர்வானது கொரோனா வைரஸுடன் வேகமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

குறிப்பிட்ட நாட்களில் நாளாந்த ஒட்சிசன் நுகர்வு சுமார் 140 தொன்னாக அதிகரித்துள்ளதாகவும், உள்ளூர் உற்பத்திக்கு மேலதிகமாக இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒட்சிசனை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மருத்துவ தர ஒட்சிசனின் பயன்பாடு குறைந்துள்ளது - சுகாதார அமைச்சு Reviewed by Author on September 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.