அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முஜாஹிர் மீண்டும் தவிசாளராக பழைய வர்த்தகமானி இரத்து செய்யப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக கடமையாற்றிய சாகுல் ஹமீது முகமது முஜாஹிர் அவர்கள் கடந்த 13. 09.2021 திகதியளவில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.சாள்ஸ் அவர்களால் தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்திருந்த நிலையில் முஜாஹிர் அவர்கள் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் இந்த நிலையில் புதிய வடமாகாண ஆளுனராக பதவியேற்றுள்ள ஜீவன் தியாகராசா அவர்கள் முன்னாள் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.சாள்ஸினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதாக புதிய ஒரு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன் அடிப்படையில் பதவி இழந்திருந்த மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீது முஹம்மது முஜாஹிர் அவர்கள் மீண்டும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக நியமிக்கப்படவுள்ளார் நாளைய(15) தினம் மன்னார் பிரதேச சபை அலுவலகத்துக்குச் செல்ல உள்ளதாக முஜாஹிர் அவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது 

 வடமாகாண புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களால் வெளியிட்டுள்ள வர்த்தகமானி அறிவித்தலின் படி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபை (இடை நேர் விளைவான ஏற்பாடுகள்) சட்டத்தின் 2ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கக்கூடிய 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 185( 1) ஆம் பிரிவின் கீழான அறிவித்தல் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 185 ( 3) (ஆ) ஆம் பிரிவின் படி விடயப் பொறுப்பு அமைச்சருக்கு உரித்தளிக்கப்பட்டு 2018.10.24.ஆந் திகதி முதலாவது வடமாகாண சபை காலாவதியான தன் பேரில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபை (இடை நேர் விளைவான ஏற்பாடுகள்) சட்டத்தின் 2ஆம் பிரிவினூடாக எனக்கு உரித்தளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் வடமாகாண ஆளுநர் ஆகிய ஜீவன் தியாகராஜா ஆகிய நான் ஓய்வு பெற்ற அலுவலர் திரு கந்தையா அரியநாயகம் அவர்களின் கீழ் அமைக்கப்பட்ட தனி நபர் விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் திரு. சாகுல் ஹமீது முகமது முஜாஹிர் அவர்களை மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்து வட மாகாண ஆளுநர் அவர்களால் வெளியிடப்பட்ட 2021/9/ 13 /ஆந திகதிய 2245/1 ஆம் இலக்க இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அதி விசேட வர்த்தமானி அறிவித்தலினை இரத்துச் செய்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது 

 அதே நேரம் முன்னாள் வடமாகாண ஆளுனர் மன்னார் பிரதேச சபை தவிசாளர் திரு. முஜாஹிர் அவர்களை மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்து நீக்கியதிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது 



மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முஜாஹிர் மீண்டும் தவிசாளராக பழைய வர்த்தகமானி இரத்து செய்யப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது Reviewed by Author on November 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.