அண்மைய செய்திகள்

recent
-

. 'ஈழத் தமிழர்களின் போக்குவரத்து அரசன் தட்டிவான்'

. 'ஈழத் தமிழர்களின் போக்குவரத்து அரசன் தட்டிவான்' 

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப் பகுதிகளில் காணப்பட்ட போக்குவரத்துச் சாதனங்களில் பெரும்பாலும் தமிழர்களின் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்து வரும் ஒரு தரை வழிப் போக்குவரத்துச் சாதனம் தான் 'தட்டி வான்'; ஆகும். தட்டி வான் அப்படியென்றால் என்ன? அது எவ்வாறு இருக்கும் என்று ஆராய்ந்து அது தொடர்பான பல சுவாரஸ்யமான விடயங்களை எழுத வேண்டும் எனும் அவா என்னுள் எழுந்தது. அந்த வகையில் என்னால் மேற்கொள்ளப்பட்ட சிறிய முயற்சி தான் இந்தக் கட்டுரையாகும். 

முதுகில் சுமந்து தமிழர்களிடையே பயணித்த தட்டிவான்கள் இப்போது எங்கே? எத்தனை பேருக்கு இது இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது? இந்தத் தட்டிவான் என்பது ஒரு பிரித்தானியத் தயாரிப்பாகும். ஒரு லொறி போல அளவில் கொஞ்சம் சிறியதாக இருக்கும். முன்பாகம் ஒரு பழைய காலத்து ஊhநஎசழடநவ காராக இருக்கும். பின்பாகம் ஒரு லொறியின் பெட்டி போல இரும்புச் சட்டத்தில் மரப் பலகைகளைப் பிணைத்து தட்டி வான் தயாரிக்கப்பட்டிருக்கும். அந்த தட்டி வானில் கண்ணாடி ஜன்னல் எதுவும் இருக்காது. கதவில்லாத ஜன்னலாக இரும்புச் சட்டத்தின் மேல் மரப் பலகைகளைப் பிணைத்து தட்டி வான் தயாரிக்கப்பட்டிருக்கும். நீளமான மரக் கதிரை இருக்கைகளும் அதில் காணப்படும். 

சாரதியின் கைக்கு எதிராக வெளிப்புறமாக பொருத்தப்பட்ட குழாய் ஹோர்னின் 'பாப்' 'பாப்' என்ற சத்தமும் என்றும் மறக்க முடியாத நினைவுகளாகவே தட்டி வானில் பயணம் செய்தவர்களுக்கு இருக்கும். இந்த தட்டி வானில் இட நெருக்கடி எப்போதும் காணப்படும். அதனால் பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் போன்றோர் உள்ளே அமர்ந்திருக்க பின்பக்கம் இருக்கும் அரைக் கதவைத் திறந்து விட்டு அதனை சங்கிலியால் பிணைத்திருப்பர். அந்தப் பலகையின் மேல் நின்று கொண்டு ஆண்கள் பயணிப்பார்கள். அவர்கள் பிடித்துக் கொண்டு நிற்பதற்கு வசதியாக கயிறும் இணைக்கப்பட்டிருக்கும். 

யாழ்ப்பாணத்தில் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடான காலப்பகுதியில் இந்த தட்டி வான் மிகப் பொரும் உதவியாக இருந்ததென்பது உண்மையாகும். இந்த வகையில் எமது மண்ணுக்குரிய அடையாளங்களில் ஒன்றாகத் தட்டி வானையும் கொள்ளலாம். தட்டி வான் பயணம் தொடர்பான ஒரு பகிடிக் கதையொன்றும் உள்ளதாகவும் சொல்வார்கள். ஒரு தடைவ ஓர் ஆச்சி கடகப் பெட்டியோடு இந்த வானில் ஏறிக் கொண்டாராம். முன்னிருக்கையில் அமர்ந்தவாறு கடகப் பெட்டியை கியர் பெட்டிக்கு மேலாக வைத்து விட்டாராம். வண்டி சென்று கொண்டிருக்கும் போது சாரதி 'அனே ஆச்சி கியர் போடனும் உந்த கடகத்தைக் கொஞ்சம் எடு' என்றாராம். உடனே ஆச்சியும் சர்வ சாதாரணமாக 'அத உந்த கடகத்துக்க போடன்' என்றாராம். எனவே இந்த வகையில் பல சுசுவாரஸ்யமான சம்பவங்கள் தட்டி வானில் பயணித்தோருக்கு அழியா நினைவுகளாக இருக்கும். 

இன்றைய காலத்தில் உள்ள பேரூந்துகளில் பெரிய பெரிய மூடைகளோடு ஏறினால் உடனே சினந்து கொள்ளும் பேரூந்து நடத்துனர்கள் மத்தியில் இந்த தட்டி வானில் பயணம் செய்யும் போது பல விவசாய உற்பத்திகளை ஏற்றிக் கொண்டு மக்கள் மிகவும் சாவகாசமாகவும் பயணம் செய்துள்ளனர். 'ஒருதலை ராகம்', 'அலைகள் ஓய்வதில்லை', 'உயிர் உள்ளவரை ', 'பயணங்கள் முடிவதில்லை'போன்ற பாடல்கள் ஒலிக்கையில் பயணங்களில் சிந்தணையை சிதற விடுமளவிற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்குமாம் அன்றைய நாட்கள். 

1970களில் பருத்தித் துறையிலிருந்து யாழ்ப்பாணம், மாணிப்பாய், அச்சுவேலி,நெல்லியடி,கொடிகாமம்,பூநகரி,பரந்தன், உடையார்கட்டு போன்ற பல பிரதேசங்களுக்கொல்லாம் இந்த தட்டி வானின் சேவை அளப்பெரியதாகவிருந்தது. பருத்தித்துறை,கொடிகாமம், நெல்லியடி போன்ற இடங்களில் தட்டி வான் கூடுதலான பங்களிப்பைச் செய்துள்ளது. காங்கேசன் துறையிலிருந்து புறப்படும் தபால் புகையிரதத்தைப் பிடிப்பதற்காக மக்கள் இந்த தட்டி வானில் பயணிப்பர். 

பருத்தித்துறை,வல்வெட்டித் துறை தபாலகங்களில் சேமிக்கப்படும் தபாற் பொதிகள் அனைத்தும் சாரதியின் பின்புறம் உள்ள இருக்கையில் நிரம்பி வழியும்;. தற்போது அதி நவீன வசதிகளுடன் காணப்படுகின்ற பல வாகனங்களில் கூட காற்றோட்ட வசதியென்பது சற்றுக் குறைவாகத் தானிருக்கின்றது. ஆனால் இந்தத் தட்டி வானில் பயணிக்கும் போது காற்று மிகத் தாராளமாகவே வந்து போகும். அன்றைய காலங்களில் திறந்த வெளிகளைக் கொண்ட இந்த தட்டி வானைப் பலரும் விரும்பினார்கள். மங்கலரூபவ் அமங்கல நிகழ்வுகளுக்குக் கூட தட்டி வான் தான் பெருமளவிற்கு மக்களை ஏற்றிச் செல்லும். கோவில் திருவிழாக்களுக்கு குறிப்பாக முல்லைத் தீவுரூபவ் வற்றாப்பழை கண்ணகையம்மன் கோவிலுக்கு தட்டி வானில் களைகட்டிய பக்தர்கள் சென்று வந்த காலங்கள் பசுமையானவையாகும். 

தட்டி வான் சாரதியாக கடைமையாற்றிய கயிலாயர் பாலசுப்பிரமணியம் என்பவர் தனது அனுபவங்களைக் கூறும் போதுரூபவ் 1978ம் ஆண்டு தனக்கென சொந்தமாக ஒரு தட்டி வானை கொள்வனவு செய்து கொண்டார். மாங்குளம் துணுக்காய் வீதி வழியே இவர் தன்னுடைய தட்டி வான் சேவையை மேற்கொண்டார். தேங்காய் மூட்டைகள், மரக்கறி மூட்டைகள்,அதிக மக்கள் என எடையைப் பற்றிக் கவலைப்படாது எவ்வளவு பொருட்களை வேண்டுமானாலும் ஏற்றிச் செல்லக் கூடிய வசதி தட்டி வானில் காணப்பட்டது. கூடாரம்,இருமரங்கு என அதிகளவான மக்களை ஏற்றிச் செல்லக் கூடியதாக இருந்தது. எவ்வித பயமுமின்றி மக்கள் இதில் சாவகாசமாகப் பயணம் செய்து வந்தனர். 

இந்த தட்டிவானில் அடிக்கும் கோர்ன் சத்தம் பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமின்றி வேலைக்குச் செல்பவர்கள் என அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை ஒலியாகவே இது காணப்படும். பொதுவாக சந்தைக்கு காய் கறிகளை ஏற்றிப் போகும் ஆச்சிமார் தான் பெரும்பாண்மையான பயணிகளாக இருப்பார்கள். நடத்துனரின் 'ரைட் ரைட்' சத்தம் கேட்குதோ இல்லையோ 'கெதியா ஏறணை ஆச்சி', 'அந்தக் கடகப் பெட்டியை தள்ளி வையுங்கோ அம்மா' என்ற சத்தம் கேட்காமல் அந்தப் பயணங்கள் சாத்தியமில்லை. பெரிய சத்தத்தோடான பாடல்கள்,காதைக் கிழிக்கும் கோன் சத்தம்,காற்றோட்டமான பயணம் என எதையும் மறக்க முடியாத அளவிற்கு இந்த தட்டி வான் பயணம் இனிமையானதாகவே அந்தக் காலங்களில் அமைந்திருந்தன. கிறீச் கிறீச் என்ற பிணைச்சல்கள் பலகைகளின் சத்தத்தோடு தாலாட்டுவது போல சத்தத்தோடு அசைந்து கொண்டு செம் மண் புழுதியையும் தரளமாக தெளித்துக் கொள்ளும் இனிமையான பயணங்கள் என்றும் மறக்கமுடியாதவை! 

திருவிழாக் காலங்களில் வடமராட்சியில் செய்யப்படுகின்ற பல கைத்தொழில் பொருட்களையும், கடலை போன்ற பொருட்களையும் ஏற்றிக் கொண்டு மடு,திருக்கேதீஸ்வரம் போன்ற இடங்களுக்கு வியாபாரிகளையும் அவர்களுடைய வியாபாரப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு சென்று அவற்றை அவர்கள் வியாபாரம் செய்து முடித்ததன் பின்னர் அவர்களைத் திரும்பவும் ஏற்றிக் கொண்டு சென்று சொந்த இடங்களில் விடுவார்கள். 

2000 ஆண்டுகளுக்குப் பின்னர் மினி பஸ்களின் (பேரூந்துகளின்) வருகையினாலும் நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து வாகனங்களின் வருகையினாலும் தட்டி வான் பயணங்களின் பண்பாடு மெல்ல மெல்ல அருகிச் சென்று இன்று இல்லாமலேயே போய் விட்டது. ஆனாலும் இந்த தட்டி வானை திரும்பவும் அனைவர் ஞாபகத்திற்கும் கொண்டு வரும் நோக்கில் நெல்லியடியில் வரையப்பட்டுள்ள தட்டி வான் சுவரோவியம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த வகையில் தமிழர்களின் பயணங்களின் பேரரசனாக இந்த தட்டி வான் அன்றைய காலங்களில் தனது சேவையை ஆற்றி வந்தது. தற்காலத்திலும் இந்த தட்டி வான்களின் சேவையை நாம் மீளக் கொண்டு வர முடியும். அமைதியானரூபவ் பொழுதுபோக்கான சவாரிக்குரூபவ் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லரூபவ் விவசாய உற்பத்திகளை ஏற்ற எனப் பல தேவைகளுக்காக நாம் தட்டி வானை மீளப் பயன்படுத்த முடியும். அதே வேளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் ஒரு நல்ல முயற்சியாகவும் இது அமையும்.

வீரக்கோன் பண்டா அனித்தா,
ஊடகக் கற்கைகள் துறை,
நான்காம் வருடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்





. 'ஈழத் தமிழர்களின் போக்குவரத்து அரசன் தட்டிவான்' Reviewed by Author on November 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.