மன்னார் பேசாலை பிரதான வீதியில் விபத்து.
-மன்னாரில் இருந்து வந்த முச்சக்கர வண்டி மீது தலை மன்னார் பகுதியில் இருந்து வந்த டிப்பர் வாகனம் பேசாலை சிறுத்தோப்பு பகுதியில் வைத்து மோதியதில் முச்சக்கர வண்டி பாரிய சேதமடைந்துள்ளதோடு, சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள்ளார்.
பேசாலை சிறுத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மோட்டார் சைக்கிலில் வந்த இரு பெண்கள் மோட்டார் சைக்கிளுக்கு தேவையான எரிபொருளை நிரப்பி விட்டு திரும்பும் போது திடீரென ஏற்பட இருந்த விபத்தை தவிர்ப்பதற்காக முச்சக்கர வண்டி சாரதி மறுபக்கம் முச்சக்கர வண்டியை திரும்பிய நிலையில் தலை மன்னார் பகுதியில் இருந்து வேகமாக வந்த டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதி குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பேசாலை பிரதான வீதியில் விபத்து.
Reviewed by Author
on
November 20, 2021
Rating:
No comments:
Post a Comment