அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் விபத்து- இருவர் படுகாயம்

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சிக்கிய இருவர், படுகாயமடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் பரந்தன் ஊடாக பூநகரிக்குத் திரும்பும் பிரதான சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பூநகரி வீதியிலிருந்து A9 வீதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள், A9 வீதியில் பயணித்த ரிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

 குறித்த விபத்தில் பலத்த காயம் அடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கிளிநொச்சி- வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

.
கிளிநொச்சியில் விபத்து- இருவர் படுகாயம் Reviewed by Author on December 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.