அண்மைய செய்திகள்

recent
-

ஜெமினியும் சுருளியும் -சிறுகதை

 ஜெமினியும் சுருளியும் -சிறுகதை 


தற்போது மதியம் 3:29மணியாகிறது. சிலருடைய கண்களில்

என்னக்கருமத்திற்கு இங்கு வந்தோம். என்ற பார்வை! சிலருக்கு எப்படியாவது எமது நிலத்தை

பிடித்து விட வேண்டும் என்ற முனுமுனுப்பு!  கணவன்-மனைவி 'ஏண்டி இங்க கூட்டி வந்த வீட்டுல பேசி தீர்த்து இருக்கலாமே' என கணவன்  கெஞ்ச, ஏதோ தீர்வு கிடைக்கும் என்ற அகந்தையில் மனைவி ஜன்னல் வழியாக

வெளியில் பார்க்க  கணவனோ சுவருக்கு கதை சொல்கிறான். தேங்காய் திருடனை பிடித்துக்

கொடுத்தவர்.; தேங்காயும்  வேண்டாம். திருடனும் வேண்டாம். இன்னும் இரண்டு தேங்காய்

வேண்டுமென்றாலும் திருடனுக்கு  கொடுத்துவிடலாம் ..இங்கு சீரழிவதை விட....! என்ற புலம்பல்

எண்ண ஓட்டத்தில். காக்கிச்சட்டை  கூட்டம் இங்கும் அங்கும் நடந்து திரிய ஏதோ

அவசரவேலை போல அவர்கள் காட்டிக்கொள்ள  கூட்டத்தில் சிலர் ஒற்றைத்தொணியில்

மக்களை அழைத்தலும் மிரட்டல் தொனியில் கேள்விகளை கேட்பதுமாய் ஏதோ ஒரு புத்தகத்தில்

எழுதிக் கொண்டிருக்கிருக்கிறார்கள். சில காக்கிச்சட்டையர்கள் கண்ணீர் தோய்ந்த பெண்ணின்

கவலையை எழுத்துக்களில் புத்தகத்தில்  வரிக்குவரி எழுதி

சலிப்படைந்திருந்தனர்.சம்பளம் வாங்குவது எங்கள் வரிப்பணத்தில் எத்தனை  சலிப்பு

அவர்களின் முகத்தில்! இத்தனை சம்பவமும் காக்கிச்சட்டை நிலையத்திற்குள் நுழையும் 

போதே பார்க்கிறான் ஜெமினி... 


 வேகமாக நிலையம் நுழைந்து உயர் காக்கிச்சட்டையிடம் சிங்களத்தில் கோபத்தின் உச்சியில் நின்றபடி ஜெமினி, 'முடியும் அல்லது முடியாது என்ற ஒற்றை  வார்த்தை கூறி இருப்பின் எனது

அலைச்சல் இருந்திருக்காதே.' சிறிது நேரம்

நிலையம் நிசப்தம்  அடைய காக்கிச்சட்டை கூட்டம் உயரதிகாரி எட்டிப்பார்க்க்

ஜெமினி மீண்டும் 'பிச்சை எடுக்க 

வரவில்லை குற்றவாளியை பிடித்துக் கொடுத்தும் கூட உங்களால் எங்களுக்கு நியாயம்

பெற்றுத்  தர முடியாவிட்டால் எதற்கு நீங்கள்' என்றான். உயர் காக்கிச்சட்டை பேச முனையும் போது  'என்னை படிப்பறிவு அற்றவர் என எண்ண வேண்டாம் மற்றவர்களுக்கு காட்டும்

தொணியில் என்னோடு கதைப்பது நிறுத்திக்கொள்ளுங்கள!; முதலாவது எனக்கும் சட்டம் தெரியும்

உங்கள்  கடமை என்ன? சரியான ஒழுங்குமுறை அறியாத மக்களுக்கு அறிவித்தல் மற்றும்

அறிவுறுத்தல்  என்பதை உங்கள் முதல் பணி.. அதை கூட உங்களால் செய்ய முடியா விட்டால்

ஏதற்காக  நீங்கள் கடமையில் இருக்கின்றீர்கள்? சரி! கதைத்து வேலையில்லை' என்றான் கோபத்தின்  இடுக்கில். எனது வழக்கு இலக்கத்தையும்

வழக்கின் திகதியையும் எழுதித் தாருங்கள் எனக் கேட்க  காக்கிச்சட்டை கூட்டம்

ஜெமினி வெளியே நிற்க தேங்காய் உரிமையாளர் 'தேங்காய் திருடனை  நான் புடிச்சனா இல்ல கள்ளன் என்ன புடிச்சானா...

என்ன கொடும சரவணா.....' என அவர் 

புலம்பலை கேட்டுக் கொண்டிருக்க கைவசம் வழக்கு எண்ணும் திகதியும் மிகபக்குவமான 

மரியாதையுடன் ஜெமினியின் கையில் வந்து சேர்ந்தது. ஜெமினி தனது முழுப் பெயரை 

கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டன் காக்கிச்சட்டை பெயரை வாசித்து சிரித்தார். அதிக

நாட்கள்  பல்கலைகழக கல்விக்காக தந்தையைப் பிரிந்து இருப்பதால் திடீரென

காக்கிச்சட்டையின் குரலில்  தந்தை குரல்.... அந்த வார்த்தைகளை அப்படியே

பின்னிணைப்பாக இணைப்பேன்  


கதையில் வரும்

ஜெமினிக்கு இவ்வளவு தைரியம் என்ற கேள்வி இப்ப என்ன? இது என்ன தான்  பிரச்சனை?

இந்த கதையை வாசிக்கும் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? என்ன கேள்வியை 

கேட்பீர்கள?; என்று என் மூளை அனுமானிக்கிறது. சரிப்பா... என்னதா இப்ப பிரச்சனை

அதை  சொல்லி தொலைடா.... என்ற கேள்வியும் கேட்கிறது. என் காதில். 


அதை சொல்ல வேண்டுமென்றால் இன்றிலிருந்து 11 நாட்கள் பின் செல்ல

வேண்டியிருக்கும்  அன்னலிங்கம் வீதியைக் கடக்க.... சுருளிராஜன் மோட்டார்

சைக்கிளில் வர... சுருளிராஜன் உடைய  உடல் எடையை விட ஆடையின் எடை கூடியது. உனக்கு

மோட்டார் சைக்கிள் இந்தக் கணக்கில்  பொருத்தமாகும் சுருளிராஜா.. அன்னலிங்கத்தின்

சைக்கில் வந்த வேகத்தில் மோட்டார் சைக்கிலில்  மோத ஒரு விபத்து! அன்னலிங்கம்

மோட்டார் சைக்கிளின் மேலே தூங்க.... சுருளிராஜனோ வீதியில்  அடிப்பட்டு ஓணான்

போல இந்த விபத்துக்கு சுருளிராஜன் வைத்தியசாலையில் சுருங்க ஜெமினி  சுருளிராஜனுக்கு

நண்பன் 'நண்பன் இருக்கா

உசுரத்தா குடுப்பா' முட்டி தேய தேய

சைக்கிள்  ஓடிவந்து மூன்று வேளை உணவு கொடுக்க. வைத்தியசாலைக்கும் வீட்டுக்கும் இப்படி

முட்டி தேய 


தேய குமார் பாடு பெரும்பாடு அல்லோலமாய் ஓடித்திரிந்த ஜெமினி மூன்று

வேளையும் இப்படியே  தொலைபேசியில் இருந்து வயர் காது வழியை அடைத்து ஒரே பாடல் வீட்டிலிருந்து

வைத்தியசாலை  செல்லும் வரை மீண்டும் மீண்டும் ஓட ஓட ஐந்து நாட்கள் அவ்வாறே ஓடியது. 


'சம்பவ தினம்

இந்த நிகழ்வை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். உலகத் தொலைக்காட்சி 

வரலாற்றில் முதல் முறையாக.... சும்மா சொல்லி பார்த்தேன் அவ்வளவு பெரிய சம்பவம் எல்லாம் 

இல்லை. ஆனால் சம்பவம்!' 


வைத்தியசாலைக்கு நோயாளிகள் பார்வை நேரம் மதியம் 12 தொடக்கம் 1 மணி வரையான  காலப்பகுதி. ஆகவே ஜெமினி வேகமாக சைக்கிளை மிதித்து 1 மணிக்கு 20 நிமிடங்கள் தான்  இருக்க அவசர அவசரமாய் வைத்தியசாலையில் பின் பாதையில் சைக்கிளை விட்டு உணவையும்  தூக்கிக் கொண்டு வைத்தியசாலைக்குள் நூழைந்தான். 'நண்பன் இருக்கா

உசுருத்தா எடுப்பா....'  என வைத்தியசாலை இருபத்தி மூன்றாம் வாட்டுக்கு ஜெமினி நுழைய சுருளிராஜனும் 'ஆத்தாடி 

பாவாட காத்தாட' என ஒய்யாரமாய்

பக்கது கட்டில் காரனுடன் ஒரே அரட்டை இந்த காட்சியை  ஜெமினி தலையில் தப்பிழம்புகள்

பீச்சிடவே சுருளிராஜன் ஜெமினியை கண்டதும் உலகநாயகன்  நடித்த வாழ்வே மாயம் படத்தை

தூக்கி சாப்பிட்டான் ஏழுக்கு நாலடி கட்டிலில். 


ஜெமினி, சுருளிராஜனிடம் உணவைக் கொடுத்து விட்டு சுருளிராஜன் நடிப்பில் வாழ்வே

மாயம் படம்  பார்த்துக் கொண்டிருக்க, உடனே சுருளிராஜன் 'என்னால ரொம்ப

கஷ்டம் ஒனக்கு டா' என்று 

கேட்க ஜெமினிக்கு அவனது வாழ்வே மாயம் நடிப்பை தாண்டி சைக்கிளை பூட்டி திறப்பை 

எடுக்கவில்லை என ஞாபகம் வந்தது. சுருளிராஜன் நண்பா! நண்பா! என அழைக்க ஒரு

பார்வைதான்  பார்த்தான் ஜெமினி 'அட சாய்க்

கேவலமா நடிக்காத' என்றதும்

சுருளிராஜன் சுருண்டான். 


ஜெமினி சைக்கிளை நோக்கி ஓடி வர ஓடி வர சைக்கிள் இருக்காது. என்ற

மனதில் ஒரு  அனுமானம் நிலைபெறத் தொடங்கியது. அவ்வாறே அதுவும் உண்மையானது. அந்த

சைக்கில்  ஜெமினியின் சைக்கிலுமில்லை. அதுவோ! சீனிவாசனின் சைக்கிளாச்சே!

அவனுக்கு பணத்தை  கொடுக்க வேண்டுமே என்ற எண்ணம் தலையைச்சுற்றி ஓடியது. மீண்டும்

சைக்கிளை தேடி பார்க்க  அவனது மூளை யோசிப்பதற்கு மாறாக எவ்வாறு சீனிவாசனுக்கு

சைக்கிலுக்கான பணத்தைக்  கொடுப்பது பற்றி யோசிக்கத் தொடங்கியது. வீட்டிலிருந்து

மாதத்துக்கே செலவுக்காக ஒதுக்கும்  பணம் 12000தான். ஆகவே சீனிவாசனுக்கு

சைக்கிலுக்கான பெறுமதியை கொடுக்க 5,000 தேவை  என்றும் ஜெமினி கண்கள் பிதுங்கிய

நிலையில் வீதி ஓரமாக சைக்கிளை தேடி நடந்தான.; அவன்  அனுமானிப்பது போல யாரோ சைக்கிளை

திருடி விட்டுச் சென்று விட்டார்கள். ஆகவே சுற்றி முற்றி  பார்த்து அங்கு காணப்படும்

கண்காணிப்பு கேமராவின் மூலம் கண்டுபிடிக்கலாம் என புலனாய்வு  ரீதியாக யோசித்தான்.

ஆனால் சைக்கிள் இருந்த இடத்தை சேர்த்து படம் பிடிப்பது போன்ற எந்த ஒரு

கண்காணிப்பு கேமராக்களும் அந்த வீதியோரங்களில் காணப்படவில்லை. சற்று நிமிர்ந்து 

பார்க்க உயரத்தில் உள்ள ஒரு வங்கியினுடைய கண்காணிப்பு கேமரா அந்த இடத்தை படம் 

பிடிப்பது போல தோன்ற வங்கியாளர்களிடம் ஜெமினி பேசினான். ஆனால் அவர்களோ

நாட்டாமை  பட வசனம் போல 'நீதிடா நேர்மடா' என பேச காக்கிச்சட்டை பிரசன்னம் அவசியம் என கூறியதும் வேகவேகமாக

படியில் இறங்கி வழியில் வந்த பேருந்தை பிடித்து விடு;திக்குச் சென்றான். 


ஜெமினி பேருந்தில் இருந்து விடுதிக்கு நடக்க ஒரு சுவரொட்டியில் 'இது எப்பிடி இருக்கு' என்ற 

வாசகம். வாழ்வே மாயம் நடித்த சுருளிராஜனின் கேவலமான நடிப்பு அவனது மனக்கண்களில் ஓடி 

தெரிந்தது. அவ்வாறு அன்று இரவு மல்லாக்காய் படுத்துக்கொண்டு சைக்கிளுக்கு வகை கூற  வேண்டி

வருமே சீனிவாசன் சைக்கிளை கேட்டால். என்ன செய்வது? என பெருமூச்சு விட பக்கத்து 

அறையில் தமிழ் புலவர் ஒருவர் தொலைபேசியில் 'சூடு கண்ட பூனை அடுப்பங ;கரையை நாடாது' என்ற உன்னதமான தத்துவத்தை யாருக்கோ தெளிவுபடுத்திக் கொண்டிருந்தார.; அதை கேட்டதும்  ஜெமினிக்கு திட்டம் ஒன்று தோன்றியது. இந்த தத்துவத்தின் மூலம் ஜெமினிக்கு சூடு கண்ட பூனை தானே அடுப்பங்கரை நாடாது. சூடு கானாத பூனை அடுப்பங்கரை நாடுமே என்ற உன்னத கண்டுபிடிப்பை கண்டுபிடிக்க..... சரி சரி ஜெமினி திட்டம் என்னவாக இருக்குமென மீதியை  வாசிக்காது அனுமானியுங்கள். 


நீங்கள் என்ன அனுமானித்தாலும் அது தவறாக இருக்கும். ஆனால் நடந்தது மீண்டும் அதே  இடத்தில் சைக்கிளை வைத்து வங்கியின் அருகே நிற்கின்றான். ஜெமினி பூனை வருமா? வருமா? என ஜெமினி சைக்கிளை அவசர அவசரமாக பூட்டாமல் விட்டு பின் பாதை வழியாக ஓடினான். வைத்தியசாலைக்குள்ளே மீண்டும் முன் பாதை வழியாக வந்து பூனைக்காக காத்திருந்தான். வங்கி  அருகே தற்போது பூனையைப் பிடிப்பதற்காக பணயம் வைத்து இருப்பது. சுருளிராஜன் உடைய  சைக்கிளை என்பது மேலதிகதகவல். ஜெமினி நினைத்தது போலவே சரியாக பூனை  அடுப்பங்கரையை நாடியது. 


ஜெமினியின்

உச்சந்தலையில் நேசமணிக்கு விழுந்த சுத்தியல் அடித்தது போல இருந்தது. கோபம் தலைக்கேர

பூனையின்  மீது பாய்ந்தான.; மக்கள் கூடியதும்.

ஜெமினியையும் பூனையையும் பிரித்து விட்டார்கள். ஆனால் ஜெமினி அவனை விடுவதாக இல்லை. 


திருடிய சைக்கிளை தந்து விடு! நான் உன்னை விட்டு விடுகிறேன்! என்கிறான்

ஜெமினி. ஆனால்  பூனையோ நான் சைக்கிளை எடுக்கவே இல்லை என்றதும் ஜெமினி; மீண்டும்

கோபத்தின் உச்சியில்  பூனையின் தாடையில் ஒரு அடி! அப்படியே அழைத்துக்கொண்டு

காக்கிச்சட்டை நிலையத்திற்கு  அழைத்துச் சென்றான். பூனையை உள்ளே ஒப்படைத்து

விட்டு நிலையத்தின் வெளியே அமர்ந்து  கொள்கிறான். அருகிலேயே ஒரு தேங்காய்

கூட்டத்துடன் ஒரு திருடன் அமர்ந்து கொண்டிருக்கிறான்.  அவனோ காக்கிச்சட்டையிடம். அவர்களும்

அலட்சியமாயிருக்க மலசலகூடம் செல்வதாக கூறிவிட்டு  என் கண் முன்னே மலசலகூட ஜன்னல்

வழியாக பாய்ந்து ஓடினான்.; அப்போதாவது ஜெமினிக்கு புரிய வேண்டாமா? நாம் வாழ்வது

இலங்கை எனும் சுதந்திர நாட்டில்!!! எவ்வாறான நீதி நியாயம் கிடைக்குமென்று ஜெமினிக்கு

தெரியாதா? 



வைத்தியசாலையில் வைத்து சீனிவாசனின் சைக்கிள் காணாமல் போக இப்போது சுருளிராஜனின்  சைக்கிள் வழக்கின் அடுத்தகட்ட தேவையான சாட்சியாக நிலையத்திலேயே நிற்க ஜெமினி  மீண்டும்  நடை ராஜா டிராவல்ஸ் பிடித்து விடுதிபோகிறான்..... மறுநாள் மீண்டும் ஜெமினி நிலையத்திற்குப்  போகும் போது பூனை சிறைக் கம்பி வழியாக எட்டிப்பார்க்கிறது. 


எப்படியாவது எனது சைக்கிள் கிடைத்துவிடும் என்ற மன ஓட்டத்தில்

ஜெமினி நிலையம் நோக்கி  நடக்க நிலையத்தில் நாளை, நாளை மறுநாள் , அடுத்த நாள் என 10 நாட்கள் உருண்டோடியது.  ஜெமினிக்கு

வைத்தியசாலை போய் முட்டி தேய்ந்ததைவிடவும் இப்போது நிலையம் நோக்கிய  பயணம்

தொடர, இத்தனைக்கும்

காரணமான சுருளிரானோ வைத்தியசாலையிலிருந்து விடுதி சென்றான.;ஜெமினி இன்று

காலை 11.22 மணியளவில் தனது அலைச்சலை எண்ணி ஒரு கட்டத்தில்  காக்கிச்சட்டையிடம்

சற்று உயர்தொணியில் நின்று 'இப்ப சைக்கில்

கிடைக்குமா? இல்லையா? பூனையையும விட்டுட்டிங்க! கானாமபோன சைக்கில் நீங்க கண்டு புடிக்க மாட்டிங்க!

நா  சாட்ச்சிக்காக குடுத்த சைக்கிலயாச்சு தாங்க' காக்கிச்சட்டை ஜெமினி தொணியை கேட்டதும ;  மேசையிலிருந்து

எழுந்து உண்ட சைக்கில் கோட்லயிருக்கு போய் மூவாயிரம் காச கட்டிட்டு 

எடுத்துட்டுப்போ...' என்றான். அதற்கு

ஜெமினி 'ஏன் நா காசு

கட்டனு' காக்கிச்சட்ட 'வழக்குத் 

தேதியில நீ வரல அதுதா' ஜெமினி 'நீங்க சொல்லவேயில்லயே' காக்கிச்சட்ட 'இப்ப போ!' 


உண்மையாவே ஜெமினி கையில் பணம் இல்லை. வழக்குக்கு 3000 ரூபாய் சீனிவாசன் சைக்கில்  பெறுமதி 5000 ரூபாய் மொத்தம் 7,000 ரூபாய் தேவை காக்கிச்சட்டைக்கு பாடம் புகட்ட ஜெமினி  திட்டம் தீட்டினான். அதுபடியே செயற்படுத்தினான். அதன் பயனே ஆரம்பத்தில் ஜெமினியின் தொணி  காக்கிச்சட்டை தொணியை தாண்டியது. இப்போதாவது ஜெமினி திட்டம் என்னவாகயிருக்கும் அது  உங்கள் அனுமானத்திற்கு விட்டுச் செல்கிறேன ;. ஜெமினிகனேசன் இலங்கையின் சட்ட ஒழுங்கின்  உன்னத ஆழத்தை பார்த்தான்........ 


செல்வராஜ் வினோதன் 

ஊடகத்துறை

இறுதியாண்டு மாணவன் 

யாழ்-பல்கலைக்கழகம்


ஜெமினியும் சுருளியும் -சிறுகதை Reviewed by NEWMANNAR on February 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.