அண்மைய செய்திகள்

recent
-

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அயலகத் தமிழ் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையாளர் நேரில் ஆய்வு..

இலங்கையில் கடும் பொருளாதார பிரச்சினை காரணமாக மார்ச் 22ஆம் தமிழகம் வந்த இலங்கை பகுதியைச் சேர்ந்த 16 பேரை மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்திருந்தனர் இந்நிலையில் மண்டபம் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களை இன்று சென்னையிலிருந்து அயலகத் தமிழ் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையாளர் ஜெஸிந்தா லாசரஸ் மண்டபம் கேம்ப் இல் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் 

 மேலும் தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது இனிவரும் காலங்களில் வரக்கூடிய இலங்கை தமிழர்களுக்கு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தமிழக அரசு சார்பில் வரக்கூடிய நபர்களுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு இதுவரை எந்த தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும் அவருடன் இணைந்து தமிழக அரசு சரியான முடிவுகள் எடுக்கப் பட்ட பின்னரே வரக்கூடிய நபர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து மண்டபம் முகாம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார் 

 தமிழக முதல்வர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தஞ்சம் அடைந்துள்ளார் தமிழர்களுக்கு சுமார் 12 திட்டங்களை அறிவித்திருந்தார் இத்திட்டங்களில் 8 திட்டங்கள் முழுமையாக முகாம்களில் நடைமுறையில் இருந்து வருகிறது மீதமுள்ள திட்டங்களும் இன்னும் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என செய்தியாளர்களிடம் ஜெஸிந்தா லாசரஸ் தெரிவித்தார்மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அயலகத் தமிழ் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையாளர் நேரில் ஆய்வு.. Reviewed by Author on March 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.