அண்மைய செய்திகள்

recent
-

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்! கோட்டா முன்னிலையில் பதவியேற்க சஜித் சம்மதம்!!

" நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில், இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கும், பிரதமர் பதவியை ஏற்பதற்கும் தயார்." இவ்வாறு குறிப்பிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. ஜனாதிபதி பதவி விலகினால்தான், பிரதமர் பதவியை ஏற்பேன் என அடம்பிடித்துவந்த சஜித், தற்போது அந்த நிலைப்பாட்டில் தளர்வை மேற்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இடைக்கால அரசை அமைப்பதற்கு முயற்சி மேற்கொண்ட நிலையிலேயே, சஜித் தரப்பு, இறுதி நேரத்தில் இந்த திடீர் நகர்வை மேற்கொண்டுள்ளது. சஜித் தரப்பின் நான்கு நிபந்தனைகள்! 

 1. குறுகிய காலப்பகுதிக்குள் பதவி விலக ஜனாதிபதி இணங்க வேண்டும். 
 2.இரு வாரங்களுக்குள் 19 ஆவது திருத்தச்சட்டம் மீள அமுலாக வேண்டும்.
 3. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 
 4. மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர், மேற்படி அரசமைப்பு திருத்தங்கள் அமுலானதும், நிலையான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்! கோட்டா முன்னிலையில் பதவியேற்க சஜித் சம்மதம்!! Reviewed by Author on May 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.